//]]>3

ஞாயிறு, 10 ஜூன், 2012

சிம்பு என்றாலே வம்பு தான்


சிம்பு என்றாலே வம்பு தான் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார் சிம்பு.
பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர்கள் செல்வராகவன், பாலா ஆகியோர் படங்களில் நடிக்க விருப்பமில்லையா என்று கேட்டதற்கு 
அவர்கள் படங்களில் நடிக்க விருப்பமில்லை. அவர்களின் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் சீரியசாக இருக்கும். தனுஷ் தான் அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிப்பார். அவர் நடிப்பவர் நான் மக்களை மகிழ்விப்பவன்.
எனக்கு தேசிய விருதோ, ஆஸ்கர் விருதோ வேண்டாம். ரஜினிகாந்த் எப்படி தளபதியில் நடித்தாரோ அதே மாதிரி நானும் அந்த மாதிரி படங்களில் நடிப்பதில் ஆட்சேபனையில்லை.
அதனால் தான் வெற்றி மாறனின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். நான் மக்களை மகிழ்விக்கும் மாஸ் படங்களில் நடிப்பதில் ஆர்வமுள்ளவன். என் படம் ஓடும் தியேட்டரில் கைதட்டல், விசில் பறக்க வேண்டும்
என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக