//]]>3

ஞாயிறு, 6 மே, 2012

பெரிய உருவமாக வானத்தில் சந்திரன் இன்று காணலாம்





சூரியனை மையமாக கொண்ட பால்வெளி மண்டல கோள்கள் அனைத்தும் தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வருகின்றன. 

இவற்றில் பூமியையும் சேர்த்து சுற்றும் ஒரே கோள் சந்திரன் மட்டுமே ஆகும். 

பூமியிலிருந்து நிலவின் வழக்கமான சுற்றுவட்டப் பாதை தூரம் 4,06,349 கி.மீ. ஆகும். 

இன்று மே 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்திரனின் சுற்று வட்டப் பாதை பூமிக்கு மிக அருகில் அமைந்து இருகோள்களுக்கும் இடையே உள்ள தூரம் 3,56,955 கி.மீ. ஆகக் குறைகிறது. 

எனவே இன்று இரவு 9 மணியிலிருந்து வழக்கத்தை விட நிலாவின் உருவம் 11 சதவீதம் பெரியதாக தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் வீதி பொதுப் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது



இறுதிப் போர் நடந்த பகுதிகளில் ஒன்றான வெள்ளாம் முள்ளி வாய்க்கால் ஊடான பாதை முதல் தடவையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டிருக்கிறது. 

புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவுக்குச் செல்லும் இந்த வீதி வெள்ளாம் முள்ளிவாய்க்கால் ஊடாகச் செல்கிறது. 

இந்த வீதியினூடாக பொதுமக்கள் போக்குவரத்து பேருந்துகள் அனுமதிக்கப்படுகின்ற போதிலும், அந்தப் பகுதிக்குள் இறங்கிச் செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. 

உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படுகின்ற இந்தப் பகுதியில் வீதியினூடாகச் செல்வதற்கும் பொதுமக்களுக்கு முன்னர் அனுமதி கிடையாது. ஆனால், இந்திய பாராளுமன்றக் குழுவின் விஜயத்தின் பின்னர், அது தற்போது பொதுமக்கள் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. 

மூன்று வருடங்களுக்கு முன்னதாக இறுதிப் போர் நடந்த புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் உட்பட ஏனைய பகுதிகளுக்கு தற்போது பொதுமக்கள் சென்று, அங்கு கைவிடப்பட்டுக் கிடக்கும் தமது வாகனங்களை பார்த்துவர அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள். 

இந்த வீதியில் பொக்கணை, மந்துவில், கரையாம் முள்ளிவாய்க்கால், வெள்ளாம் முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய பகுதிகளினூடாகச் சென்று வந்த எமது பீபீசி செய்தியாளர், பொன்னையா மாணிக்கவாசகம், போர் முடிந்து மூன்று வருடங்களின் பின்னரும் அந்தக் கிராமங்கள் ஒரு மயானம் போன்றே காணப்பட்டதாகக் கூறுகிறார். 

கைவிடப்பட்டு சிதைந்துபோன வாகனங்களும், இடம்பெயர்ந்த மக்களின் பாத்திர பண்டங்களும் அங்கு இறைந்து கிடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

குண்டுகளால் துளையிடப்பட்ட சில கட்டிடங்களும் ஆங்காங்கு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (பீபீசி தமிழோசை) 

கண்டி மற்றும் மஹியங்கனை இடையிலான 18 வளைவுவீதி திறக்கப்பட்டுள்ளது



கண்டி மற்றும் மஹியங்கனை ஆகிய நகரங்களை இணைக்கும் 18 வளைவுகள் கொண்ட வீதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

500 கோடி ரூபாய் செலவில் மூன்று வருடங்களாக நிர்மாணிக்கப்பட்டு வந்த இவ்வீதி, திறக்கப்படுவதால் மஹியங்கனையிலிருந்து கண்டிக்கு செல்லும் நேரம் இரண்டு மணித்தியாலங்களினால் குறையும் என வீதி அபிவிருத்தி சபை தெரிவிக்கின்றது.
 

சனி, 5 மே, 2012

24h news 5.5.2012 .இரவுச்செய்திகள்(வீடியோ)

ஜனாதிபதியின் சம்மா சம்புத்த வாழ்த்து செய்தி!


ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்து செய்தி…!
புத்த பெருமானின் வாழ்வில் மிக முக்கிய மூன்று நிகழ்வுகளைக் குறித்து நிற்கும் வெசாக் பெருவிழாவை பூரண அரச அனுசரணையுடன் கொண்டாடக் கிடைத்தமையை நான் பெரும் பாக்கியமாக கருதுகின்றேன்.
கடந்த வெசாக் பண்டிகையின் போது உதயமான ஸ்ரீசம்புத்தத்வ ஜயந்தி வருடத்தில் இலங்கைவாழ் பெளத்த மக்கள் பெளத்த கொள்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்ததைக் கண்டு நாம் பெரிதும் மகிழ்ச்சியடைந்தோம்.
புத்தபெருமானின் மீதான ஆழ்ந்த தியானத்தின் அபரிமிதமான மகிழ்ச்சியுடன் இந்த வெசாக் தினத்தில் சம்புத்தத்வ ஜயந்தி கொண்டாட்டங்கள் நிறைவுபெறுகின்றன என்ற வகையில் இந்த வருடத்தில் இலங்கையெங்கும் பரவிச் சென்ற பாரிய சமய எழுச்சி- ஞானம்- அர்ப்பணம் என்பவற்றை நாம் நினைவுகூருகிறோம்.
புத்த பெருமானின் மீதும் அவரது போதனைக ளின் மீதும் உள்ள இந்த மகிழ்ச்சி எல்லா இலங்கையர்களினதும் உள்ளங்களிலும் நீடித்து நிலைத்துநிற்க வேண்டுமென்பதே எமது விருப்பமாகும்.
குழப்பமில்லாத ஒரு வாழ்க்கையை முன்னெடுக்க புத்தரின் போதனைகள் சிறந்த வழியாகும்.
இந்தப் போதனைகள் தீமைகள் இல்லாத வாழ்வுக்கும் ஈருலக வெற்றிக் கும் வழிகாட்டுகின்றன.
பிழையான எண்ணங்கள்- சிந்தனைகளைக் கொண்டவர்கள் எமது முன்னேற்றத்தின் வாயில்களை மூடிவிடும் பல்வேறு பிரிவினைகளையும் மோதல்களையும் தோற்றுவிக்கின்றனர் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
அத்தனாவ கதங் பாபங் – அத்தனா ஸங்கிலிஸ்ஸதி
அத்தனா அகதங் பாபங் – அத்தனாவ விஸ¤ஜ்ஜிதி
ஸ¤த்தி அஸ¤த்தி பச்சத்தங் – நாஞ்ஞோ அஞ்ஞங் விஸோதயே
உன்னாலேயே பாவம் செய்யப்படுகிறது. உன்னையே அது அசுத்தப்படுத்துகிறது. பாவம் செய்யாமலிருப்பவர் தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்கிறார். பாவமும் புண்ணியம் உன்னாலேயே செய்யப்படுகின்றன.
ஒருவர் இன்னொருவரைச் சுத்தம் செய்ய முடியாது என தம்மபதம் குறிப்பிடுகின்றது.
எனவே இந்த வெசாக் பண்டிகைக் காலத்தில் எல்லாவகையான பிரிவினைகளையும் ஒதுக்கிவிட்டு தேசிய ஐக்கிய சமய நல்லிணக்கத்திற்காக அர்ப்பணத்துடன் செயற்பட்டு பெளத்த போதனைகளின் ஒளியில் ஈருலக வெற்றிக்கு வழிசெய்வோம்.
உங்கள் எல்லோருக்கும் சம்மா சம்புத்த நல்லாசிகள்!

தொலைக்காட்சி நிகள்வு்களின் ஏற்பாடுகள் எப்படி நடக்கிறது பாருங்கள் (வீடியோ)

தொலைக்காட்சி நிகழ்சிக்கு முன் நடைபெறும் சில நிகழ்வுகள் உங்களுக்கு கவனமாக செயற்படுங்கள்

வெள்ளி, 4 மே, 2012

தற்போது பெண்களை ஆண்கள் விரும்புவதா ஆண்களை பெண்களை விரும்புவதா அதிகம்


திருமணத் தகவல் தொடர்பு இணையதளம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், அழகான பெண்ணே மனைவியாக வரவேண்டும் என ஆண்களும்; நல்ல வேலையில் உள்ள ஆண் தான் கணவனாக வரவேண்டும் என பெண்களும் விரும்புகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.



டில்லியைச் சேர்ந்த திருமணத் தகவல் தொடர்பு இணையதளம் ஒன்று, தன் இணையதளத்தில் திருமணத்துக்காகப் பதிவு செய்திருந்த ஆண், பெண் உட்பட ஐயாயிரம் பேரிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. தன் வருங்கால கணவன் அல்லது மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.அந்த ஆய்வில், பெண் குடும்பத்தாரின் பின்னணிக்கு, 49 சதவீத ஆண்கள் முன்னுரிமை அளித்துள்ளனர். பெண்ணின் அழகான தோற்றத்துக்கு, 48 சதவீதம் பேர் முக்கியத்துவம் அளித்துள்ளனர். 39 சதவீதம் பேர், தனக்கு வரும் மனைவியின் கல்வி குறித்து கவலை தெரிவித்துள்ளனர். 47 சதவீதம் பேர், வருங்கால மனைவியின் வேலைவாய்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். 45 சதவீதம் பேர், பெண்ணின் ஜாதி மற்றும் இனம் குறித்து அக்கறை தெரிவித்துள்ளனர். மாறாக, 54 சதவீதம் பெண்கள், தங்களுக்கு கணவனாக அமையப் போகிறவரின் வேலை குறித்து அக்கறை தெரிவித்துள்ளனர்.
53 சதவீதம் பேர், கல்வி குறித்தும், 52 சதவீதம் பேர், கணவரின் குடும்பப் பின்னணி குறித்தும் கருத்து தெரிவித்துள்ளனர். 46 சதவீதம் பேர், ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 65 சதவீதம் பெண்கள், ஆண்களின் தோற்றத்தை முக்கியமானதாகக் கருதவில்லை.இதுகுறித்து அந்த இணையதளத்தின் தலைவர் கூறுகையில், “பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் போக்கு இக்காலத்தில் மாறிவருகிறது. அப்படிப்பட்ட நிலையில் கூட, ஜாதி மற்றும் குடும்பப் பின்னணி முக்கிய காரணிகளாகவே கருதப்படுகின்றன. இதற்கு, மணமகன் தன் பெற்றோரின் கருத்துக்கு இணங்கிச் செல்வதே முக்கிய காரணம். பெண்கள் தங்களின் பாதுகாப்பான வாழ்க்கை குறித்து கவலைப்படுவதால், கணவனின் கல்வி மற்றும் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்’ என்று தெரிவித்தார்.இருப்பினும், அழகான பெண்ணே தனக்கு மனைவியாக வரவேண்டும் என்ற ஆண்களின் எதிர்பார்ப்பே ஒருவகையில் சட்டவிரோதமான கள்ளத் தொடர்புகளுக்கும் வழிவகுத்து விடுகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இராணுவ சிப்பாய்கள் இருவர் பலி



யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியோரமாக ஈபிடிபி அலுவலகத்திற்கு முன்னாள் உள்ள இராணுவ பாதுகாப்புச் சோதனைச் சாவடியொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு இராணுவ சிப்பாய்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.

இந்த இரு இராணுவ சிப்பாய்களும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு சிப்பாய்   மற்றுமொரு இராணுவ சிப்பாய் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார்.
இந்த இரு இராணுவ சிப்பாய்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட காரணத்தின் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
தனது சக சிப்பாய் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட இராணுவ சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இச் சம்வப இடத்திற்கு சென்ற யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசாராச மற்றும் சட்ட வைத்திய அதிகாரி நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


யாழில் கயிறு தயாரிக்கும் தொழிலாளி

வியாழன், 3 மே, 2012

24h news யாழில் நடைபெற்ற பெரகரா டான்ஸ்

24h news சிங்கள டான்ஸ் 3

எந்த விடியோவையும் மெயிலில் அனுப் ஏதுவான புதிய மென்பொருள்



வீடியோவை பகிர்வது என்றாலே தலைவழியாக உள்ளது. பெரிய அளவு விடியோவை மெயில் செய்ய முடியாது அதற்கு திர்வு தான் Vigleo மென்பொருள் வீடியோ ஒரு வேகமான வழியில் ஒரு சுலபமாக பகிர செய்யலாம். உங்கள் கணினியில் இருந்து எந்த வடிவத்தில் எந்த வீடியோ எடுத்து Vigleo அதை சேர்க்க வேண்டும். பின்பு இதை நீங்கள் மின்னஞ்சல் மூலம், அல்லது உங்கள் சொந்த வலை தளத்தில் அதை சேர்க்க ஒரு குறியீட்டை உட்பொதி கிடைக்கும்


 Vigleo உங்கள் Web Cam வீடியோ பதிவு அல்லது ஒரு வீடியோ பயிற்சி செய்ய உங்கள் திரையில் ஒரு திரை பிடிப்பு செய்ய வாய்ப்பு கொடுக்கிறது.இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7download

பேஸ்புக்கில் நண்பர்களுடன் பாடல் கேட்கும் வசதி




நண்பர்களுடன் பேசி(chat)க்கொண்டிருக்கும் போதே, விரும்பிய பாடல்களையும் கேட்டுக்கொள்ளும் வசதியை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒருவருடன் என்று மட்டுமல்லாது பல நண்பர்களுடனும் பாடல்களைக்கேட்டுக்கொண்டே சட் பண்ண முடியும்.
அனைவருக்கும் ஒரே நேரத்தில் பாடல் ஒலிப்பதனால், விருப்பத்திற்குரிய குறிப்பிட்ட “பாடல் வரிகளை”ப்பற்றிய கருத்துக்களை கூட ஒரே நேரத்தில் கலந்துரையாட முடியும்
.ஏற்கனவே உள்ள சட்டிங் லிஸ்ட்டுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இச்சேவையானது பாவனைக்கு மிக இலகுவாகவும், தனிமையைப்போக்கி அனைவரும் பக்கத்தில் இருப்பது போன்ற உணர்வைக்கொடுக்கும் என ஃபேஸ்புக் நிறுவந்தார் தெரிவித்துள்ளனர்
.இது எப்படி தோற்றமளிக்க உள்ளது என்பதை பின்வரும் படங்களில் பாருங்கள்.
 ஃபேஸ்புக்கின் இவ் வசதி கூகுள்+ இற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
இச்சேவையப்பெற நீங்கள் “Music App” அப்லிகேஷன்களை நிறுவ வேண்டும்.
தமிழ் குளோனின் பரிந்துரை அப்லிகேஷன்களை “இங்கு” நீங்கள் காணலாம்.


யாழ் ஊடக சுதந்திரதின ஒளிப்படக்கண்காட்சி (வீடியோ-video)

ஊடக சுதந்திரதினத்தினை முன்னிட்டு சுதந்திர ஊடகக்குரல் நடாத்தும் ஒளிப்படக்கண்காட்சி யாழ் நாவலர் வீதியில் உள்ள தியாகிகள் அறக்கட்டளை நிலையத்தில் நேற்று (02.05.2012) புதன் கிழமை காலை 9.10 முதல் ஆரம்பமாகி மாலை வரை நடைபெற்றது 


இங்கு காட்சிப்படுத்தப்பட்ட காட்சிப்படங்களின் வீடியோ

செவ்வாய், 1 மே, 2012

எதிர்க்கட்சிகளின் மே தின ஊர்வலத்தில் மர்ம நபர்கள் புலிக்கொடியுடன்



யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் மே தின ஊர்வலம் கோயில் வீதியூடாக வந்து கொண்டிருந்தவேளை, இனந்தெரியாத நபர்கள் சிலர், ஊர்வலத்தில் சென்றவர்களுக்கு புலிக்கொடியை விரித்துக் காட்டியவாறு ஓடிச்சென்று மறைந்தனர்.
தங்களது காற்சட்டைப் பைகளில் மறைத்து வைத்திருந்த புலிக்கொடியை எடுத்துக்கொண்டு, 5 மர்ம நபர்கள், மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கு காட்டியவாறு ஓடிச் சென்றனர்.
குறித்த நபர்கள் எதற்காக இவ்வாறு செய்தனர் என்பதும், அவர்களது நோக்கம் என்ன என்பதும் இதுவரை கண்டறியப்படவில்லை.

Rare Two Head Snake in India(Video) அபூர்வ நாகம் (வீடியோ)

இரட்டைத் தலை உடைய அபூர்வ நாகம் ஒன்று இந்தியாவைச் சேர்ந்த பாம்பாட்டி ஒருவரிடம் உள்ளது என வீடியோவுடன் செய்திகள் வெளியாகி உள்ளன.பாம்பாட்டி மகுடி ஊதுகின்றார். இந்நாகம் ஆடுகின்றது.

ஈ.பி.டி.பி.யின் மேதினக்கூட்டம் யாழ் மாநகர சபைத் திடலில்

இவ்வருடத்திற்காக ஈ.பி.டி.பி.யின் மேதினக்கூட்டம் யாழ் மாநகர சபைத் திடலில் நடைபெற்றது  கூட்டத்தில் தற்போது கூடாக வடபகுதி மக்களுடைய உணர்வுகள், அபிலாசைகள் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். 










ஜக்கிய கூட்டின் மேதின கொண்டாட்டம்

யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த மேதினப் பேரணியில் ரணிலும் சம்மந்தனும் ஆயிரக்கணக்கான மக்கள் முன் தூக்கிப் பிடித்துக் காட்டும் போது அந்த சந்தோசத்தில் விஜயகலா மகேஸ்வரன் இருவருக்கும் பக்கத்தில் நின்றார்