ஞாயிறு, 1 ஏப்ரல், 2012
இவ்வருடம் 3 மாதங்களில் 578 பேர் வீதி விபத்துக்களால் பலி
இவ்வருடம் மார்ச் 28 ஆம் திகதிவரையான 3 மாத காலப்பகுதியில் நாடுமுழுவதும் வீதி விபத்துக்களால் 578 பேர் உயிரிழந்ததுடன் 1270 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் நேற்று தெரிவித்தது.
இதேவேளை, கடந்த சனிக்கிழமை காலை 6.00 மணிமுதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிவரையான 24 மணித்தியாலங்களில் வீதி விபத்துகளால் 11 பேர் பலியானதுடன் 23 பேர் காயமடைந்தனர்.
கடுவெலயில் நடைபெற்ற விபத்தொன்றில் இருவர் பலியானதுடன் 7 பேர் காயமடைந்தனர். ஆடைத்தொழிற்சாலையொன்றின் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் ஒன்றுடன் கார் ஒன்று மோதியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.
கேகாலையில் பஸ் ஒன்றும் வான் ஒன்றும் மோதியதால் இருவர் பலியானதுடன் 6 பேர் காயமடைந்தனர்.
குருநாகல் நாரம்மலவில் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் 24 வயதான இளைஞர் ஒருவர் பலியானார்.
நுவரெலியா – பதுளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்தனர்.
அம்பலங்கொடையில் வான் ஒன்றும் - ட்ரக் ஒன்றும் மோதிக்கொண்டதால் ஒருவர் பலியானார்.
இதேவேளை, கடந்த சனிக்கிழமை காலை 6.00 மணிமுதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிவரையான 24 மணித்தியாலங்களில் வீதி விபத்துகளால் 11 பேர் பலியானதுடன் 23 பேர் காயமடைந்தனர்.
கடுவெலயில் நடைபெற்ற விபத்தொன்றில் இருவர் பலியானதுடன் 7 பேர் காயமடைந்தனர். ஆடைத்தொழிற்சாலையொன்றின் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் ஒன்றுடன் கார் ஒன்று மோதியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.
கேகாலையில் பஸ் ஒன்றும் வான் ஒன்றும் மோதியதால் இருவர் பலியானதுடன் 6 பேர் காயமடைந்தனர்.
குருநாகல் நாரம்மலவில் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் 24 வயதான இளைஞர் ஒருவர் பலியானார்.
நுவரெலியா – பதுளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்தனர்.
அம்பலங்கொடையில் வான் ஒன்றும் - ட்ரக் ஒன்றும் மோதிக்கொண்டதால் ஒருவர் பலியானார்.
மியன்மரில் இன்று இடம்பெற்ற தேர்தலில், ஆங் சான் சூகீ
மியன்மரில் இன்று இடம்பெற்ற தேர்தலில், ஜனநாயக வாதி ஆங் சான் சூகீ தனது கட்சி சார்பாக முதன் முதலாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
மியன்மர் நாடாளுமன்றத்தின் 45 ஆசனங்களுக்காகவே இந்த தேர்தல் இடம்பெற்றுள்ளது.
2 தசாப்த காலத்திற்கு பின்னர் ஆங் சான் சூகீயின் தேசிய ஜனநாயக வாதி கட்சி நிர்வாகத்தை கைப்பற்றியள்ளது.
தேர்தலின் போது செய்தியாளர்களுக்கு முழு உரிமை வழங்கப்பட்டிருந்தது..
இதன்படி, சுமார் 100 வெளிநாட்டு செய்தியாளர்களும் அங்கு நிலைகொண்டுள்ளனர்.
1990 ம் ஆண்டளவிலேயே ஜனநாயக கட்சி தேர்தலின் போட்டியிட்டிருந்தது.
இதேவேளை, தேர்தல்கள் சுமூகமாக நிறைவடையும் பட்சத்தில் மியன்மாருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதர தடையினை அகற்றுவது குறித்து பரிசீலிக்க முடியும் என ஐரோப்பிய ஒன்றியம் மறைமுகமாக தெரிவித்தது.
இதேவேளை, மியன்மாரின் இராணுவ நிர்வாகம் பெரும்பாளான அரசியல் கைதிகளை விடுவித்துள்ளது.
ஜனநாயக வாதியான ஆன்சான் சூகி 20 வருடங்களுக்கு மேல், ராணுவ ஜுன்டா ஆட்சியாளர்களால் வீட்டுக்காவலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
இன்றைய தேர்தலில் ஆன்சான் சூக்கியின் கட்சியான ஜனநாயகத்திற்காக தேசிய லீக் கட்சி உட்பட 17 எதிர்கட்சிகள் போட்டியிட்டிருந்தன.
தி டர்ட்டி பிக்சர்ஸ் திரைப்படம் தமிழிலும் ரீ-மேக்
ஹிந்தியில் மாபெரும் வெற்றிபெற்ற தி டர்ட்டி பிக்சர்ஸ் திரைப்படம் தமிழிலும் ரீ-மேக் செய்யப்படவுள்ளது.
சில்க் சுமிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ஹிந்தியில் எடுக்கப்பட்ட படம் தி டர்ட்டி பிக்சர்ஸ்.
இதில் சில்க் சுமித்தாவாக நடிகை வித்யாபாலன் நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் இந்தப்படத்தில் நடிப்பதற்கு வித்யாபாலனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, இந்தப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது, இருப்பினும் அனைத்து எதிர்ப்புக்களையும் மீறி தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் வெளியாகி வித்தியாபாலனுக்கு தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ரீ-மேக் செய்யப்படவுள்ளது. இதில் சில்க்சுமித்தா வேடத்தில் நடிகை அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.விரைவில் இதுபற்றிய அறிவிப்புக்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வவுனியாவில் வீசிய கடும் காற்று
வவுனியா - மெனிக்பாம் நலன்புரி நிலையத்தை அண்மித்து ஊடறுத்து வீசிய கடும் காற்று காரணமாக 1,172 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கடும் காற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
சனி, 31 மார்ச், 2012
மீண்டும் அஞ்சலோ மெத்திவ்ஸ்
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கான உடற்தகுதியை அஞ்சலோ மெத்திவ்ஸ் பெற்றுள்ளார்.
இந்த தகவலை இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளர் அஷந்த டி மெல் உறுதிப்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் குறித்த போட்டியில் அஞ்சலோ மெத்தியூஸ் பந்துவீச மாட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த போட்டியில் பிரகாசிக்க தவறிய சாமர சில்வா அடுத்த போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சானக்க வெலகெதர கடந்த போட்டியில் உபாதைக்குள்ளாதை அடுத்து அவருக்கு பதிலாக சமிந்த எரங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக அ
அஷந்த டி மெல் கூறியுள்ளார்.
எதிர்வரும் செவ்வாய் கிழமை ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் ஆறாம் இலக்க துடுப்பாட்ட வீரராக அஞ்சலோ மெத்தியூஸ் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்டக்கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

























































