//]]>3

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

மியன்மரில் இன்று இடம்பெற்ற தேர்தலில், ஆங் சான் சூகீ


மியன்மரில் இன்று இடம்பெற்ற தேர்தலில், ஜனநாயக வாதி ஆங் சான் சூகீ தனது கட்சி சார்பாக முதன் முதலாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
 
மியன்மர் நாடாளுமன்றத்தின் 45 ஆசனங்களுக்காகவே இந்த தேர்தல் இடம்பெற்றுள்ளது.
 
2 தசாப்த காலத்திற்கு பின்னர் ஆங் சான் சூகீயின் தேசிய ஜனநாயக வாதி கட்சி நிர்வாகத்தை கைப்பற்றியள்ளது.
 
தேர்தலின் போது செய்தியாளர்களுக்கு முழு உரிமை வழங்கப்பட்டிருந்தது..
 
இதன்படி, சுமார் 100 வெளிநாட்டு செய்தியாளர்களும் அங்கு நிலைகொண்டுள்ளனர்.
 
1990 ம் ஆண்டளவிலேயே ஜனநாயக கட்சி தேர்தலின் போட்டியிட்டிருந்தது.
 
இதேவேளை, தேர்தல்கள் சுமூகமாக நிறைவடையும் பட்சத்தில் மியன்மாருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதர தடையினை அகற்றுவது குறித்து பரிசீலிக்க முடியும் என ஐரோப்பிய ஒன்றியம் மறைமுகமாக தெரிவித்தது.
 
இதேவேளை, மியன்மாரின் இராணுவ நிர்வாகம் பெரும்பாளான அரசியல் கைதிகளை விடுவித்துள்ளது.
 
ஜனநாயக வாதியான ஆன்சான் சூகி 20 வருடங்களுக்கு மேல், ராணுவ ஜுன்டா ஆட்சியாளர்களால் வீட்டுக்காவலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
 
இன்றைய தேர்தலில் ஆன்சான் சூக்கியின் கட்சியான ஜனநாயகத்திற்காக தேசிய லீக் கட்சி உட்பட 17 எதிர்கட்சிகள் போட்டியிட்டிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக