//]]>3

புதன், 13 ஜூன், 2012

அப்பிளின் ரெடினா திரையுடன் கூடிய புதிய மெக்புக்


இளைஞர்களின் ஜனரஞ்சன இலத்திரனியல் நிறுவனமான அப்பிள்சென்பிரான்சிஸ்கோவில் நடத்திய தனது வருடாந்த டெவலப்பர் மாநாட்டில் (Worldwide Developers Conference) புதிய மெக்புக் புரோ மற்றும் ஐ.ஓ.எஸ் இன் புதிய தொகுப்பு உட்பட சிலவற்றை அறிமுகப்படுத்தியது.

இப்புதிய மெக்புக் புரோவின் சிறப்பம்சம் என்னவெனில் அதன் திரையாகும். அப்பிளின் ஐ போன் மற்றும் ஐ பேட் சாதனங்கள் கொண்டுள்ள ‘ரெடினா’ திரையை புதிய மெக்புக் புரோ கொண்டுள்ளது. இதன் அளவு 15.4 அங்குலமாகும். மேலும் இது வெறும் 0.71 அங்குலம் தடிப்பனானது.
இதனைவிட குவாட்கோர் புரசசர், 16 ஜிபி வரையான ரெம், 768 ஜிபி பிளாஸ் ஸ்டோரேஜ் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.

இதன் பெட்டரி சுமார் 7 மணித்தியாலங்கள் நீடிக்கக்கூடியதாகும்.
எனினும் இதன் ஆரம்ப விலை 2,199 அமெரிக்க டொலர்களாகும்.
மேலும் மென்பொருள் வரிசையில்…
பல மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய வசதிகளுடன் iOS6 வெளியாகியுள்ளது.
சுமார் 200 க்கும் அதிகமான புதிய வசதிகளை இது உள்ளடக்கியுள்ளதாக அப்பிள் தெரிவித்துள்ளது.
அவையாவன…
அப்பிளின் குரல்கட்டளைக்கு ஏற்ப செயற்படும் ‘sri’ வசதியானது நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஐபேட் 2 மற்றும் 3 இலும் ஐ சைரி இனிமேல் செயற்படும்.
‘சைரி’ கன்டோனீஸ், கொரியன்,கனேடியன் போன்ற மொழிகளிலும் செயற்படும்
டுவிட்டரில் டுவிட் செய்ய, பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் செய்ய, முன்பதிவுகளை மேற்கொள்ளவும் சைரி இனிமேல் உதவி செய்யும்.
பேஸ்புக் முற்றிலுமாக இணைக்கப்பட்டுள்ளது. அப்ளிகேசன், சைரி ஊடாகவும் பேஸ்புக்கினுள் நுழையமுடியும்.
தியேட்டர் மற்றும் விமான டிக்கெட்டுக்களை கையாள்வதற்கென ‘ பாஸ்புக்’ எனும் விசேட அப்ளிகேசன்.
முற்றிலும் புதிய தோற்றத்துடன் கூடிய ‘மெப்’ அப்ளிகேசன்.
“do not disturb” எனும் உள்வரும் அழைப்புகளுக்கு மெசேச் மூலமாக பதில் வழங்கக்கூடிய வசதி.
மேம்படுத்தப்பட்ட மின்னஞ்சல் அப்ளிகேசன் மற்றும் சபாரி அப்ளிகேசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக