//]]>3

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

யாழ்.-கடலுக்குள் போகும் அம்பன் பகுதி




யாழ்.வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் மணல் அகழ்வு காரணமாக பாரிய அளவில் கடல் நீர் உட்புகுந்து அவ் இடத்தில் உள்ள அம்பன் பகுதி அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இப் பகுதியில் இடம்பெறும் தொடர்ச்சியான மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துமாறு அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று அப்பகுதியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் சம்பந்தமாக பல முறை போராட்டங்கள் நடாத்தியும் இன்று வரையில் எந்தவிதமான தீர்வுகளும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட எந்த தரப்பினரும் இதுவரையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நீண்டகாலமாக இப்பகுதியில் எந்தவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத விடத்து இவ்வாறு மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் இப்பகுதியானது நீரில் முழ்கும் அபாயம் உள்ளதாகவும் பொது மக்கள தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக