சீனாவின் பெரிய பாலைவனமான சிங்ஜாங்கில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்த கோவில் ஒன்று அகழ்வாராய்ச்சி குழுவினரின் 2 மாத கடுமையான முயற்சியால் நேற்று முன்தினம் வெளிகொண்டு வரப்பட்டது.
இந்த கோவில் சுற்றிலும் சதுர வடிவிலான 4 வராண்டாக்களுடன் கூடிய மைய மண்டபத்தை கொண்டு அமைந்துள்ளது. மண்டபத்தின் நடுவே சிதைந்த நிலையில் புத்தரின் பெரிய சிலை ஒன்று உள்ளது.
இந்தியாவில் புத்த மதம் தோன்றிய காலத்தில் இருந்த இந்திய கட்டிட கலையை அடிப்படையாக கொண்டு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. எனவே புத்தமத ஆய்வில் ஈடுபடும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு இந்தியாவிலிருந்து புத்தமதம் சீனாவில் பரவிய காலம் குறித்த முக்கிய ஆதாரமாக இது இருக்கும் என சீனாவின் மூத்த அகழ்வாராய்ச்சியாளர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக