//]]>3

திங்கள், 11 ஜூன், 2012

கடலில் சமந்தா விலகவில்லை, விலக்கப்பட்டார் – 8 ஆல் வந்த பிரச்சினை!



மணிரத்தினத்தின் கடல் திரைப்படத்தில் இருந்து நடிகை சமந்தா விலகியதாக செய்திகள் வெளியாகின. தற்போது, சமந்தா தானாக விலகவில்லை, மணிரத்தினம் தான் விலக்கினார் என்ற உண்மை வெளியாகியுள்ளது.
இதற்கான காரணமாக சொல்லப்படுவது, கடல் நாயகன் கவுதமை விட சமந்தாவுக்கு 8 வயதுகள் அதிகமாக இருந்தது தானாம். அதாவது கவுதமுக்கு வயது 19. சமந்தாவுக்கோ வயது 27.
கடல் படத்தில் சமந்தாவின் வேடத்துக்கு வயது 13. இந் நிலையில் சமந்தாவை வைத்து சில காட்சிகளை எடுத்த மணிரத்னம், அக் காட்சிகள் திருப்தியடையாததாலேயே அவரை நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இவ் வெட்கிக்கும் நிகழ்வை மறைப்பதற்காக சமந்தா, கால்சீட் பிரச்சினை என்று சொல்லிவருகிறாராம்.
இத் திரைப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நயன்தாரா நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக