மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவருக்கு மன்னார் உப்புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிலரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள ஜோசப் வாஸ் நகர் மீனவர்களுடைய வாடிகளை மன்னார் உப்புக்குளம் கிராம மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அடித்து உடைத்து சேதப்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் செய்திகளை ஊடகங்களில் வெளியிட்ட ஊடகவியலாளர்கள் இருவருக்கே இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரச்சினை தொடர்பில் உண்மை நிலவரங்கள் சர்வதேச ரீதியில் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நபர்களை கைது செய்ய மன்னார் பொலிஸார் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆத்திரமடைந்த மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த சிலர் மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்களான இருவரையும் நேரடியாக எச்சரித்துள்ளதோடு குறித்த ஊடகவியலாளர்களை கொலைசெய்து விடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் வன்னி பத்திரிகையாளர் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக