சனி, 31 மார்ச், 2012
மீண்டும் அஞ்சலோ மெத்திவ்ஸ்
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கான உடற்தகுதியை அஞ்சலோ மெத்திவ்ஸ் பெற்றுள்ளார்.
இந்த தகவலை இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளர் அஷந்த டி மெல் உறுதிப்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் குறித்த போட்டியில் அஞ்சலோ மெத்தியூஸ் பந்துவீச மாட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த போட்டியில் பிரகாசிக்க தவறிய சாமர சில்வா அடுத்த போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சானக்க வெலகெதர கடந்த போட்டியில் உபாதைக்குள்ளாதை அடுத்து அவருக்கு பதிலாக சமிந்த எரங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக அ
அஷந்த டி மெல் கூறியுள்ளார்.
எதிர்வரும் செவ்வாய் கிழமை ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் ஆறாம் இலக்க துடுப்பாட்ட வீரராக அஞ்சலோ மெத்தியூஸ் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்டக்கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளி, 30 மார்ச், 2012
13 வயதான சிறுமி வல்லுறவு
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 13 வயதான சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை குறித்த வழக்கு மீதான விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் இதன்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால், ஏப்ரல் ஒன்பதாம் திகதி வரை சந்தேகநபரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்தக் கொலை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட நால்வர் ஏற்கனவே தமது சாட்சியங்களைப் பதிவு செய்திருந்தனர்.
கடந்த மூன்றாம் திகதி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், நெடுந்தீவு எட்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த யேசுதாசன் லக்சினி என்ற குறித்த சிறுமியின் சடலம், நெடுந்தீவு ஒன்பதாம் வட்டாராப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
குறித்த சிறுமி வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கல்லால் தாக்கி தலை சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது.
நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்த யேசுதாசன் லக்சினி ஏழு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் நான்காவது பிள்ளையாவார்.
சிறுமியின் கொலைச் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது இதற்கு முன்னரும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மியன்மாரில் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது
மியன்மாரில் நடைபெறவுள்ள தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என ஜனாநாயக செயற்பாட்டரும், எதிர்கட்சி தலைவருமான ஆங் சாங் சூகி தெரிவித்துள்ளார்.
கடந்த வார இறுதியில் சுகவீனமடைந்த ஆங் சாங் சூகி, செய்தியாளர் சந்திப்பொன்றில் இதனைத் கூறியுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
நாளை மறுதினம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற இடைத்தேர்தலில் முறைகேடுகள் இடம்பெறலாம் எனவும் ஆங் சாங் சூகி குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதாக கருத முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரங்கூனின் தென்மேற்கு பகுதியில் போட்டியிடும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி இந்த தேர்தலில் வெற்றிபெறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிவேக விமானத்தை எயார்பஸ்
அதிவேக விமானத்தை எயார்பஸ் குழுமம் உருவாக்கியுள்ளது. ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் ராம் ஜெட் இயந்திரம் இதில் பொருத்தப்படுகின்றன.
ஹோலந்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் யூரோப்பியன் ஏரோநாட்டிக் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் கம்பெனி (இஏடிஎஸ்). ஏயார்பஸ் நிறுவனத்தின் தாய் அமைப்பு. புதிய தொழில் நுட்பங்கள் மூலம் தொடர்ச்சியாக பல்வேறு மாதிரி விமானங்களை உருவாக்கி வருகிறது.
பிரான்ஸ்
லைநகர் பரீசில் நடந்துவரும் சர்வதேச விமான கண்காட்சியில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது இ.ஏ.டி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பான மேக் 4 எனப்படும் ஹைப்பர்சொனிக் விமானம்.
லைநகர் பரீசில் நடந்துவரும் சர்வதேச விமான கண்காட்சியில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது இ.ஏ.டி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பான மேக் 4 எனப்படும் ஹைப்பர்சொனிக் விமானம்.
ஒலியின் வேகம் மணிக்கு 1,236 கி.மீ. இதைவிட வேகமாக செல்லக்கூடிய சூப்பர்சொனிக் விமானங்கள். ரஷ்யாவின் டுபோலவ் நிறுவனம் டியூ 144 என்ற சூப்பர்சொனிக் விமானத்தை 1968ல் அறிமுகப்படுத்தியது.
1978ஆம் ஆண்டு வரை இது இயக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஏயாகிராஃப்ட் கோப்பரேஷன் நிறுவனத்தின் சூப்பர்சொனிக் விமானம் 1976ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது. அதிக செலவு, அதிக விபத்து வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் இதுவும் 2003ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. பயணிகள் போக்குவரத்துக்கு சூப்பர்சொனிக் விமானங்கள் தற்போது இயக்கப்படுவது இல்லை.இந்நிலையில், ஒலியைவிட சுமார் 4 மடங்கு அதிகமாக, மணிக்கு 4,800 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடிய ஹைப்பர்சொனிக் விமானத்தை இ.ஏ.டி.எஸ் வடிவமைத்துள்ளது.
சென்னையில் இருந்து சுமார் 1,800 கி.மீ. தூரத்தில் உள்ள டில்லிக்கு இந்த விமானத்தில் 20 நிமிடத்தில் போய்விடலாம். இந்த விமானத்தில் 3 இன்ஜின் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை செல்ல 2 இயந்திரங்களும் அதன் பிறகு ஹைப்பர்சொனிக் வேகத்தில் பறக்க இன்னொரு ரெம்ஜெட் எனப்படும் இயந்தரமும் பயன்படுத்தப்படுகிறது.

இது ஏவுகணை, ரொக்கெட்களில் பயன்படுத்தப்படும் இயந்தரம், வழக்கமான விமான ஓடுதளத்தில் இருந்தே இந்த விமானத்தை இயக்க முடியும். எரிபொருளாக ஐதரசன் வாயு, ஒட்சிசன் கலவை
பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழலை பாதிக்காது. ஹைப்பர்சொனிக் விமானத்துக்கான வடிவமைப்பு முடிந்து விட்டது. 100 பயணிகள் செல்வதற்கு ஏற்ப விமானம் கட்டப்படும் என்கின்றனர் இ.ஏ.டி.எஸ் விஞ்ஞானிகள்.
பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழலை பாதிக்காது. ஹைப்பர்சொனிக் விமானத்துக்கான வடிவமைப்பு முடிந்து விட்டது. 100 பயணிகள் செல்வதற்கு ஏற்ப விமானம் கட்டப்படும் என்கின்றனர் இ.ஏ.டி.எஸ் விஞ்ஞானிகள்.
31.03.2012 இன்று யாழ் காலநிலை
05:39:19 Saturday 31, March 2012
- Saturday
31
March
+12°C..+16°C - Sunday
01
April
+12°C..+16°C - Monday
02
April
+12°C..+16°C - Tuesday
03
April
+12°C..+16°C - Wednesday
04
April
-1°C..+1°C
Saturday 31 March | Current conditions | |||
night 3:00 | morning 9:00 | afternoon 15:00 | evening 21:00 | |
Moon | Sun cloud | Sun | Moon | |
Temperature, °C | +12 .. +15 | +12 .. +15 | +14 .. +16 | +13 .. +16 |
Pressure, millibars | 756 .. 379 | 758 .. 380 | 755 .. 379 | 757 .. 380 |
Humidity, % | 82 .. 84 | 78 .. 80 | 66 .. 68 | 78 .. 80 |
Wind, m/s | 2 .. 3 S | 1 .. 2 S | 0 .. 1 SW | 0 .. 2 SE |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)