//]]>3

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

14 வயது சிறுமிமீது பாலியல் துஷ்பிரயோகம்



தண்ணீர் எடுக்கச் சென்றபோது 14 வயது சிறுமியை இனந்தெரியாத நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று யாழ். தென்மராட்'சி, மிருசுவிலில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாகவது

மிருசுவில் கெற்பொலிப் பகுதியைச் சேர்ந்த சிறுமி கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை மாலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள வயல்வெளிக் கிணற்றில் தண்ணீர் எடுத்து வருவதற்காகச் சென்றுள்ளார்
.
மேற்படி சிறுமி தண்ணீர் எடுப்பதற்காக தனியாக வருவதை அவதானித்த அங்கிருந்த நபர் ஒருவர் சிறுமியை தனியாக இழுத்துச் சென்று மறைவிடம் ஒன்றில் வைத்து அச் சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரிந்துவிட்டு மயங்கிய நிலையில் சிறுமியை விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தண்ணீர் எடுப்பதற்குச் சென்ற சிறுமியை நெடுநேரமாகியும் காணவில்லை என்று தேடிச்சென்ற பெற்றோர் சம்பவ இடத்திற்கு வருகைதந்த வேளை அங்கு சிறுமி மயக்கமடைந்த நிலையில் வீழ்ந்து கிடப்பதனைக் கண்டுள்ளனர்.

அங்கிருந்து சிறுமி மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். ஆயினும் தொடர்ச்சியாக கடுமையான இரத்தப் பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை செய்த வைத்தியர்கள் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

இதற்கிடையில் கிணற்றடியில் ஏற்கனவே நின்றிருந்ததாக கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் தேடிவரும் நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொடிகாமம் பொலிஸார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் வலைவிரித்து தேடிவருகின்றனர். 

நாடு முழுவதும் பொலிஸ் திடீர் தேடுதல்



நாட்டின் பல பாகங்களிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 

இதன்போது பிலியந்தலாவை மடபான பிரதேசத்தில் சட்டவிரோத மது தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நான்கு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். 

சட்டவிரோத தயாரிப்பு மது போத்தல்கள் 945யும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதோடு அதில் 90 போத்தல் கசிப்பும் அடங்குகின்றது. 

மேலும் பன்னல 40ம் ஏக்கர் பகுதியில் சட்டவிரோத மது தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஐந்து சந்தேகநபர்கள் தயாரிக்கப்பட்ட மதுவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் பதுளை - தெம்மோதர பகுதியில் சட்டவிரோத மது தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஒரு சந்தேகநபரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் சூது விளையாடிய 8 பேர் கைது

வவுனியா - மதவாச்சி தனியார் ஹோட்டல் ஒன்றில் சூது விளையாடிக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உட்பட 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண் கட்டி வித்தை காட்டும் பொலிஸ்

பொலிஸ் திணைக்களத்தின் புதுவருட கொண்டாட்டங்கள் இன்று (08) பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தலைமையில் பொலிஸ் பார்க் மைதாகத்தில் இடம்பெற்றபோது பொலிஸ் மா அதிபர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கண்ணை கட்டுவதை படத்தில் காணலாம். 

34 ஆண்டுகளில் ஒரு கிராமம்






சுன்னாகம் கலைவாணி சனசமூக நிலையத்தின் 34ஆவது ஆண்டு விழாவும், பொதுக்கூட்டமும் (07.04.2012)  வெள்ளிக்கிழமை சனசமூக நிலையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது

இந்தப் பொதுக் கூட்டத்தில்  கிராமத்தின் 400 கிலோ மறீற்றர் நீளமான வீதிப்புனரமைப்பு தொடர்பாகவும், பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம்பெற்றது.

இந்தச் சனசமூக நிலையத்துடன் இணைந்து செயற்படும் சிறுவர் கழகத்திற்கு பெற்றோர்கள் சிறுவர்களை அனுப்பாதத்ன் காரணமாக 3 வருடங்களாக இயங்கவில்லை எனவும், பெற்றோர்கள் இனிமேலாவது பிள்ளைகளை சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி அவர்களது ஆளமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சிறுவர் மேம்பாட்டு அதிகாரி ந. சந்திரா தெரிவித்தார்.

J \ 196 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த தையல் வேலை தெரிந்த  பயனாளிகள் அனைவருக்கும் 15ஆயிரம் ரூபா பெறுமதியான தையல் இயந்திரங்கள் மாத் மாதம் தவணை அடிப்படையில்   750 ரூபா  வீதம் செலுத்தும் முறையில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும்,

செந்தகாணியுள்ளவருக்கு மலசல கூடவசதியும் , மகிந்த சிந்தனை திட்டத்தின் கீழ்   நாடு முழுவதும் வழங்கப்படவுள்ள 10 இலச்சம் வீட்டுதோட்ட பயனளிகளுக்கு தானியவிதைகளும் மரகன்றுகள்  வழங்கும் திட்டத்தில் இந்தக்  கிராமத்தில் 50பயனாளிகள் கிராமசேவையாளர் ஊடகவும் , 50 பயனாளிகள் சமூர்த்தி திட்டத்தின் மூலமும் பயன்பெறஉள்ளதாகவும், குறிப்பிட்ட கிராமசேவகர் யஜூஜன்  இதன்முதல்கட்டமாக 5 பயனாளிகளுக்கு  தானியவிதைகளும் மரக்கன்றுகள் வளங்கப்பட்டது.

கிராம சங்கத்தின் தலைவி சுரேஸ்குமார்  சிவாஜினி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறுவர் நன்நடத்தை அதிகாரி சிவஞானவேல் சிறுவர் மேம்பாட்டு அதிகாரி  சந்திரா சிறுவர் நிகழ்ச்சிதிட்ட உத்தியோகத்தர் நவசீலன், சமூத்திஉத்தியோகத்தர் சிறிஸ்கந்தராஜா ,J/196 கிராம உத்தியோகத்தர் யஜூஜன் என பலர் கலந்து கொண்டனர்

இந்தக் கலைவாணி  சனசமூக நிலையம் 1978.04.08 ஆண்டு உருவாக்கப்பட்டு இந்தப்பிரதேச மக்களின் வளர்ச்சிக்காக சேவையற்றி வருகிறது   விளையாட்டு கழகம் ,  மாலைநேரவகுப்புகள் என்பன நடைபெற்று வருவதுடன்,  இசை, நடன வகுப்புக்களும் இங்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சனி, 7 ஏப்ரல், 2012

புனித வெள்ளிதினத்தில் யேசு வந்தது உன்மை


புனித வெள்ளியான நேற்றைய தினம், தமிழ்நாடு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கேரளா பெண் ஒருவருக்கு உடலில் ரத்தம் வழிந்ததால் பரபரப்பு எற்பட்டு உள்ளது.


இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது எப்படி அவரது கை,கால்களில் ரத்தம் வந்ததோ அதுபோல் இந்த பெண்ணின் உடலில் ரத்தம் வழிந்தது.
அவர் கேரளா மாநிலம் பாலகாடு தொட்டிபாறையை சேர்ந்த ஜோஸ்பின் விமலா(வயது 30). இவர் வருடம் தோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு வரும் தவக்காலம் நாளில் கேரளாவில் இருந்து ஏற்காட்டிற்கு வருவார்.
ஏற்காடு லேடிஷீட் வளைவில் உள்ள கார்மல் ஆஸ்ரமத்தில் தங்கி இருப்பார். இந்த ஆஸ்ரமத்தில் கன்னியாஸ்திரிகள் தவக்கால வழிபாடு நடத்துவார்கள்.
அதில் ஜோஸ்பின் விமலா கலந்து கொண்டு, தவக்காலமான 40 நாட்களும் இங்கேயே தான் இருப்பார். அதுபோல் இந்த ஆண்டும் தவக்காலத்தில் பங்கு கொண்டு ஜோஸ்பின் விமலா இன்று புனித வெள்ளி என்பதால் ஆஸ்ரமத்தில் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.
அப்போது பிரார்த்தனையில் ஆழந்திருந்த ஜோஸ்பின் விமலாவின் உடலில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. அதாவது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது அவரது 2 கை, 2 கால்கள், முகத்தில் ரத்தம் வழியும். அதுபோன்று ஜோஸ்பின் விமலாவிற்கும் ரத்தம் வழிந்தது. இதனை அருகே இருந்தவர்கள் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் மெல்ல மெல்ல அந்த பகுதி முழுவதும் பரவியது.
இதனால் ஏராளமான கிறிஸ்தவர்கள் கார்மல் ஆஸ்ரமத்திற்கு படையெடுத்தனர். அவர்கள் ஜோஸ்பின் விமலா உடலில் இருந்து ரத்தம் வருவதை பார்த்தம் இது ஆண்டவரின் சித்தம். அதனால் தான் இந்த புனித வெள்ளி தினமான இன்று ஜோஸ்பின் விமலா மூலம் காட்சி தருகிறார் என்று வணங்கினர்.
இந்த தகவல் சேலம் மற்றும் அருகே உள்ள மாவட்டங்களில் பரவியது. இதனால் ஏராளமான கிறிஸ்தவர்கள் இந்த காட்சியை பார்ப்பதற்காக ஏற்காட்டிற்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட ஜோஸ்பின் விமலாவிற்கு உடலில் ரத்தம் வழிவது இது முதல் முறை அல்ல. தொடர்ந்து 11 ஆண்டுகளாக அதுவும் புனித வெள்ளி அன்று தான் ரத்தம் கொட்டி வருகிறது.
கேரளாவில் இதுபோன்ற தகவல் பரவியதால் ஜோஸ்பின் விமலா பிரார்த்தனை செய்ய முடியாத அளவிற்கு கூட்டம் மொய்த்து விடும். இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ஏற்காட்டிற்கு வந்து செல்கிறார்.
இதுவரை ஜோஸ்பின் விமலா உடலில் ரத்தம் வழிவது பற்றி தமிழகத்தில் தெரியாத நிலையில் இந்த ஆண்டு புனித வெள்ளியையொட்டி தெரிய வந்தது. இதனால் ஜோஸ்பின் விமலாவை பார்க்கும் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவால் ரட்சிக்கப்பட்ட பெண் என்றே கூறுகின்றனர்.

மொபையிலில் TE



USB இணைப்பில் பயன்படுத்தக் கூடியதும், எளிதில் எடுத்துச் செல்லக் கூடியதுமான Power Pot எனப்படும் மின்சார அடுப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுவே USB இணைப்பைக் கொண்ட முதலாவது வெப்ப இலத்திரனியல் மின்சார அடுப்பாகும். இவற்றை மின்சார வசதியற்ற இடங்களில் சார்ஜ் செய்து பயன்படுத்த முடியும்.

இவை 5W, 10 W, 15 W ஆகிய வேறுபட்ட வலுவுடைய மின்சாரத்தில் பயன்படுத்த கூடியவாறு வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.
இதன் பெறுமதியானது பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவிற்கு அமைய 125 தொடக்கம் 500 அமெரிக்க டொலர்களுக்குள் மாறுபடக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

9 வயது மகளை ஓநாய்களுடன் அடைத்து வைத்து தந்தை சித்ரவதை



ஓநாய்களுடன் கூண்டில் 9 வயது மகளை அடைத்து வைத்த தந்தையால் சீனாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நியூயார்க் நகரில் வசிக்கும் சீனர் ஒருவர் தனது 6 வயது மகனை கொட்டும் பனியில் சட்டை ஏதும் இல்லாமல் ஓடவிட்டு பயிற்சி அளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் 9 வயது மகளை ஓநாய்களுடன் கூண்டில் அடைத்து பயிற்சி அளித்த தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது ரும்கி. இந்நகரில் செல்ல பிராணிகள் கண்காட்சி நடந்தது. இங்கு 2 ஓநாய்கள் அடைக்கப்பட்ட கூண்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அந்த கூண்டில் 9 வயது சிறுமி ஸு லின் என்ற சிறுமியும் அடைக்கப்பட்டிருந்தாள். இதுகுறித்து அவளது தந்தை ஸு யாங்ஷெங் கூறுகையில், என் மகள் துணிச்சலுடன் வளர வேண்டும். அதற்காகதான் இந்த பயிற்சி. ஆனால் நான் கொடூரமானவன் என்று சிலர் கூறுகின்றனர் என்று சாதாரணமாக கூறினார்.
ஓநாய்களுடன் கூண்டில் சிறுமி இருக்கும் படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தைக்கு பல தரப்பில் இருந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாய் மற்றும் ஓநாய்களுக்கு பயிற்சி அளிக்கும் தொழில் செய்து வருகிறார் ஸுயாங் என்பது குறிப்பிடத்தக்கது.


238 வருடங்கள் களித்து நேற்று


238 வருடங்கள் பழமை வாய்ந்த திருநெல்வேலி ஸ்ரீ நீலாயதாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ காயாரோகண சுவாமி என அழைக்கப்படும் பரவைக்குளம் சிவன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நேற்று (06.04.2012 ) காலை 8.30 மணிக்கும் 10.30 மணிக்குமிடைப்பட்ட சுப நேரத்தில் நடைபெற்றது.

இந்த ஆலயத்தின் புனருத்தாரன காலத்தில் எல்லா சிலைகளும் அகற்றி ஓரிடத்தில் வைத்து கிரியைகள் நடைபெற்றாலும் மூலவரான காயாரோகண சுவாமி மூலலிங்கம் மட்டும் அகற்றப்படாமல் அடே இடத்தில் வைத்து 6 கால கிரியைகள் நடைபெற்றது.

IMG01232-20120406-1044

திருநெல்வேலி திருவருள் மிகு ஸ்ரீ நீலயதாட்சி சமேத காயா ரோகண சுவாமி ஆலயம் 1774 ஆம் ஆண்டு திருமடந்தை நாத முதலியார் பரம்பரையினரால் கட்டப்பட்டது.

ஆலயத்தின் வடபுறத்தே முத்துமாரியம்மன் ஆலயமும், வடகிழக்கில் தலங்காவற் பிள்ளையார் கோயிலும், தெற்கே வீரமாகாளி அம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.

IMG01231-20120406-1034

இவ்வாலய காவற்தெய்வமாகத் தலங்காவற் பிள்ளையார் கோயில் விளங்குகிறது. இவ்வாலயத்தின் மூலவராக காயாரோகணேஸ்வரரும் தெற்கு நோக்கிய திசையில் நீலாயதாட்சி அம்பாளும், உட்பிரகாரத்தில் ஏனைய பரிவார மூர்த்திகளும் காணப்படுகின்றனர்.

IMG01229-20120406-1033

இந்த ஆலயத்தில் பரம்பரை பரம்பரையாக பூசகர்களாகவும் ஆதீன கர்த்தாக்களாகவும் விளங்கி வருபவர்கள் அந்தணர்களே. அந்த வழியில் பரமசாமிக்குருக்கள் வழி வந்தோரால் இன்றும் நித்திய, நைமித்திய கிரிகைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 1994 இல் பங்குனி மாத உத்தர நட்சத்திரத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆலயத்தின் திருப்பணி வேலைகள் பொதுமக்களின் உதவியுடன் காலந்தோரும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

IMG01207-20120406-0954

இந்த ஆலய புனர் நிர்மானப்பணிகளை திருப்பணியாக நிறைவேற்ற தேவஸ்தான பரிபாலன சபையினரும் சிவனடியார்களும் விரும்பியமைக்கமைய 3 கோடி ரூபா செலவில் பணிகள் நடைபெற்றன.

IMG01211-20120406-1002

ஆலயத்தின் கட்டடப் பணிகளை துரிதமாக நிறைவேற்றுவதற்கு சீர்காழி தொல்லிடத்தைச் சேர்ந்த சிற்பாசாரி கலைஞர் புருஷோத்மன், கட்டட ஒப்பந்தக்காரரான ஊரெழுவைச் சேர்ந்த சண்முகநாதன் மற்றும் அன்பர்கள் ஆகியோரே சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து இன்று நடைபெற்ற குப்பாபிஷேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

புளியம் பொக்கணையில் பெருவிழா



வரலாற்றுச் சிறப்பு மிக்க கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடந்த பங்குனி உத்தரப் பெருவிழா இந்த வருடமும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் பொங்கல் விழாவில் இருநூற்றுக்கும் மேற்பட்ட தூக்கு காவடிகள், ஆட்டக் காவடிகள், பாற்செம்புகள் என்பவற்றுடன் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தமது நேர்ததிக் கடன்களை நிறைவேற்றினர்.
இதேவேளை, நேரத்திக் கடனுக்காக ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகள், கோழிகள் எனபன ஏலத்திற்கு விடப்பட்டது. இதன்போது பலர் இவற்றை ஏலத்தில் வாங்குவதற்கு முண்டியடித்துக்கொண்டு நின்றமையை அவதானிக்க முடிந்ததது.
அத்துடன், ஏராளமான வியாபார நிலையங்கள், ஆலயச் சூழலைச் சுற்றி அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளும் களைகட்டியது.
பக்தர்களின் போக்குவரத்திற்கான ஒழுங்குகளை கிளிநொச்சி தனியார் போக்குவரத்து கழகமும், இலங்கை போக்குவரத்து சபையும் ஏற்பாடுசெய்திருந்தபோதும், ஆலயத்திற்கு அண்மையில் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உழவு இயந்திரங்களில் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
400 வருடங்களுக்கு முற்பட்ட கால வரலாற்றினைக் கொண்ட இந்த ஆலயத்தில் பொங்கலுக்காக 8 நாட்களுக்கு முன்னராகவே விளக்க வைக்கின்ற வைபவமும், இந்த நிகழ்வினைத் தொடர்ந்து ஆலயத்தின் பரம்பரைப் பூசகர்கள் பண்டமேற்றும் வண்டியில் சென்று அடியார்களின் நேர்த்திப் பொருட்களை பெற்றவந்து பொங்கல் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வீதி குளமானது



கிளிநொச்சி பாரதிபுரத்திற்கும் அம்பாள் குளத்திற்கும் இடையேயான பிரதான வீதியின் நடுவில் குளம் போன்று பாரிய குழி ஒன்று காணப்படுவதால் இவ்வீதியால் பயணம்செய்ய முடியாதுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பொதுச்சந்தை மற்றும் விவேகானந்தா வித்தியாலம் போன்றவற்றிற்கு செல்லும் பிரதான வீதியாகக் இந்த வீதி காணப்படுவதால் வியாபாரிகள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
மழை காலங்களில் வீதியில் காணப்படும் பாரிய குழியினுள் நீர் தேங்கி நிற்பதால் பலர் விபத்துக்குள்ளான சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இந்த வீதி தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி விரைவில் வீதியை புனரமைத்துத் தருமாறும் இந்தப் பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குட்டி நகரம் ஏலம்




2012ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதியன்று நகரம் ஏலம் விடப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ஓன்லைனில் விளம்பரம் வெளியிடப்பட்டது.
அதன்படி பபோர்ட் நகரம் நேற்று ஏலம் விடப்பட்டது. 12 பேர் பங்கேற்றனர். முதலில் ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் ஏலத் தொகை கிடுகிடுவென உயர்ந்தது.
கடைசியில் ரூ.4.5 கோடிக்கு ஏலம் முடிந்தது. வியட்னாமை சேர்ந்த 2 கோடீஸ்வரர்கள் நகரை ஏலம் எடுத்தனர். ஏலம் முடிந்தவுடன், அந்த 2 பேரையும் டான்ஜா அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டார். மீடியாவிடம் பேச அவர்களை அனுமதிக்கவில்லை. அதனால் ஏலம் எடுத்தவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
ஏலம் குறித்து டாம் சம்மன்ஸ் கூறுகையில், என் பாதி வாழ்நாளை இந்த நகரத்தில் கழித்துவிட்டேன். இப்போது நகரை விட்டு பிரிவது வருத்தமாக இருக்கிறது. மகன் வசிக்கும் இடத்துக்கு அருகில் வாடகைக்கு வீடு பார்ப்பேன் என்கிறார்.
கடந்த 1980ம் ஆண்டில் இருந்து இதுவரை பபோர்ட் நகரில் கிடைத்த அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட திட்டமிட்டுள்ளார் சம்மன்ஸ்.
பபோர்ட் நகரத்தை 2 பேர் விலைக்கு வாங்கியதால், இதன் மக்கள் தொகை இப்போது இரண்டு மடங்காகி விட்டதாம். அதனால் அமெரிக்காவில் குறைந்த மக்கள் தொகை கொண்ட நகரம் என்ற பெருமையை பபோர்ட் இழந்து விட்டது.
 விட்டது.

இன்று: ஏப்ரல் 07



1927: முதலாவது தொலைதூர தொலைக்காட்சி ஒளிபரப்பு வாஷிங்டன் டி.சி நகரிலிருந்து நியூயோர்க் நகருக்கு மேற்கொள்ளப்பட்டது.

1939:அல்பேனியா மீது இத்தாலி படையெடுத்தது.

1943: உக்ரேனின் டேராபோவ்லியா நகரில் 1100 யூதர்கள் உள்ளாடைகள் வரை ஆடைகள் களையப்பட்டு அருகிலுள்ள கிராமொன்றுக்கு பேரணியாக கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1946: பிரான்ஸிடமிரந்து சிரியா சுதந்திரம் பெற்றது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

1948: உலக சுகாதார ஸ்தாபனம் ஐ.நாவினால் அமைக்கப்பட்டது.

1978: நியூத்திரன் குண்டு தயாரிப்புத் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஒத்திவைத்தார்.

2003:  அமெரிக்கத் துருப்புகள் ஈராக்கின் பாக்தாத் நகரை கைப்பற்றின

இலங்கைக்கு எந்தவித தடைகளும் இல்லை


ரோம், மிலன் மற்றும் மொஸ்கோவிற்கான இலங்கை எயார்லைன்ஸ் சேவைகள் எந்தவித தடைகளும் இன்றி இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. 

தற்போது உள்ள அட்டவணைப் படி எந்தவித மாற்றங்களும் இன்றி செயற்படும் என இலங்கை எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. 

அதிநவீன ஒன்லைன் வசதியைக் கொண்ட இரகசியக் கமெராக்கள்



பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொருத்தப்படும் இரகசியக் கமெராக்கள் மேற்கொள்ளும் பதிவுகளை சேமிப்பதற்கு கணினியுடன் நேரடியாக இணைக்கப்படுவது அவசியமாகும். இதனால் சில சந்தர்ப்பங்களில் சிக்கல்களை எதிர் நோக்க நேரிடும்.
ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ION Air Pro POV இரகசியக்கமெராக்கள் மூலம் பதிவு செய்யப்படும் காட்சிகளை நேரியாக ஒன்லைன் சேமிப்பான cloud storage ல் சேமிக்க முடியும். மேலும் ஐந்து மெகா பிக்சல் வில்லையைக் கொண்ட இந்த வீடியோ கமெரா மூலம் 1080 பிக்சல்கள் உயர் பிரிதிறன் கொண்ட காட்சிகளாக பதிவு செய்ய முடிவதுடன் அதன் முன் 170 டிகிரில் காணப்படும் காட்சிகளை உள்ளடக்கவல்லது.

நல்லதா...?



கித்துலக வருண 2012' கண்காட்சி இன்று சனிக்கிழமை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகர அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள விற்பனைப் பொருட்களைப் பார்வையிடுவதை படங்களில் காணலாம். 

நாட்டின் பல பாகங்களிற்கும் இன்று சூரியன்



இன்று சூரியன் நாட்டின் பலபாகங்களிற்கும் மிகவும் அண்மித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. 

இன்று நண்பகல் 12.13இற்கு நாட்டின் சில பிரதேசங்களிற்கு சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதன்படி வக்கடுவ, பெல்மதுளை, யட்டியந்தோட்டை, ராகமை, கொத்மலை, கரவனெல்ல ஆகிய பிரதேசங்களுக்கு சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. 

இந்நிலைமையானது கடந்த 5ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

தமிழ் அமிதாப்..?



ஆசியாவைப் பொறுத்தமட்டில் ஒரு சில சூப்பர் ஸ்டார்களே இருக்கிறார்கள். ஜக்கிசான், ரஜினி, அமிதாப் பச்சான் போன்ற முன்னணி நடிகர்களே சூப்பர் ஸ்டார்களாக, நடிப்புலகின் ஜாம்பவான்களாக இருந்து வருகிறார்கள். தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான். ஆனால் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் அநேகமானோர் அமிதாப் பச்சனைத்தான் குறிப்பிடுவார்கள்.


அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி இந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்று கணிப்பினை ரசிகர்கள் வாயிலாக மேற்கொண்டது. அந்த கருத்துக் கணிப்பில் ரஜினிக்கு அதிகமான வாக்குகள் கிடைத்திருந்தது. இருப்பினும், அண்மையில் கோச்சடையான் படம் தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ரஜினி - உண்மையான சூப்பர் ஸ்டார் என்றால் அது அமிதாப் பச்சன்தான் என்று கூறியிருந்தார். இப்படி பல புகழுக்கு சொந்தக்காரரான அமிதாப்புடன் தான் வெகுவிரைவில் இணைந்து நடிக்கப்போவதாகவும் ரஜினி கூறியிருந்தார். 

இது இப்படியிருக்க, அமிதாப் பச்சனை தமிழ் படமொன்றில் எப்படியாவது நடிக்க வைத்துவிடவேண்டும் என பல இயக்குநர்கள் முயற்சித்தார்கள். அமிதாப்பின் நெருங்கிய நண்பர்களான ரஜினி, கமல் உட்பட பலர் முயற்சித்தும் அது சாத்தியப்படவில்லை. கடைசியாக எந்திரனில் அமிதாப்பை எப்படியாவது நடிக்க வைத்துவிடவேண்டும் என பலர் முயற்சித்தும் அதுவும் இறுதிநேரத்தில் கைகூடாமல் போயிருந்தது. அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னதை வைத்துப் பார்த்தபோது அவருடன் இணைந்து அமிதாப் நடிப்பார் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அதற்கு முன்பாக வேறு ஒரு செய்தி இப்போது வெளிவந்திருக்கிறது.

காமராஜர், முதல்வர் மகாத்மா போன்ற படங்களை இயக்கிய பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் நடிப்பதற்கு அமிதாப் பச்சன் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக நம்பகமான செய்திகள் வெளிவந்திருக்கிறன. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து தமிழ் படமொன்றினை பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் கதை அமிதாப் பச்சனுக்கு பிடித்துப் போய்விட்டதாம். தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்படத்தினூடாக நிறைவேறப்போகிறது என்று சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியதாக நம்பகமான செய்திகள் வெளிவந்திருக்கின்றன. 

வியாழன், 5 ஏப்ரல், 2012

இலங்கையின் இரட்டை அழகு..!



2012ம் ஆண்டுக்கான தெரண வீற் மிஸ் ஸ்ரீலங்கா பட்டத்தை இம்முறை இரண்டு பேர் தட்டிச்சென்றுள்ளனர். முதலாவது இடத்தை வீனு உதானி சிறிவர்தன மற்றும் சுமுது பிரசாதினி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

மூன்றாவது இடத்தை ரமாஷா கலப்பத்தி பெற்றுக்கொண்டார். வரலாற்றில் முதற் தடைவையாக இருவர் மிஸ் ஸ்ரீலங்கா பட்டத்தை 


சுவீகரித்துக்கொண்டாலும் 2012ம் ஆண்டுக்கான உலக அழகிப்போட்டியில் சுமுது பிரசாதினி கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்ரன் பிறந்தநாள் துபாயில்


நடிகை சிம்ரன் தனது பிறந்தநாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் துபாயில் கேக் வெட்டி கொண்டாடினார்.

வெள்ளித்திரையில் கொடிகட்டி பிறந்த நடிகை சிம்ரன், கல்யாணத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்டார்.

இப்போது சின்னத்திரையில் அசத்தி கொண்டிருக்கும் சிம்ரன், ஜெயா டி.வி.யின் ஜாக்பாட் நிகழ்ச்சி‌யை தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார்.


இந்த நிகழ்ச்சியின் 500வது எபிசோட்டை துபாயில் நடத்தி வருகின்றனர் ஜெயா டி.வி. குழுவினர். இதற்காக தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் துபாய் சென்றிருந்தார் சிம்ரன்.

சிம்ரனுக்கு நேற்று 04.04.12ம் திகதி பிறந்தநாள். தனது பிறந்தநாளை துபாயில் உள்ள இந்திய‌ உய‌ர்நிலைப்ப‌ள்ளியின் ஷேக் ராஷித் அர‌ங்கில் த‌ன‌து க‌ண‌வ‌ர், குழ‌ந்தைக‌ள் ம‌ற்றும் ர‌சிக‌ர்க‌ளுட‌ன் எளிய‌ முறையில் கொண்டாடினார்.

ப‌ல்வேறு த‌மிழ் அமைப்புக‌ளின் பிர‌முக‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து வாழ்த்துக்க‌ளை ந‌டிகை சிம்ர‌னுக்கு தெரிவித்துக் கொண்ட‌ன‌ர்.