//]]>3

வெள்ளி, 2 மார்ச், 2012

யாழ் இந்துவா கொக்குவில் இந்துவா பலப்பரீட்சை


68.4 பந்துபரிமாற்றம்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 275ஓட்டங்களை முதல் இனிங்சிற்காக கொங்குவில் இந்துக் கல்லரி அணி பெற்றுக்கொண்டுள்ளது.








வியாழன், 1 மார்ச், 2012

B M W யு யாழில் சாகசம்


உலகப் புகழ் பெற்ற மோட்டார் சைக்கிள் வீரர் கிறீஸ்பீவிபர் இன்று 3.30 மணிக்கு யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்திற்கு முன்னுள்ள வீதியில்சாகசம் செய்தார் 




















செவ்வாய், 31 ஜனவரி, 2012

அயந்தா ஓவியம்

எனும் ஊரில் உள்ள குகைகளில்இயற்கை முறையில் வரைந்த ஓவியங்களேஅஜந்தா ஓவியங்களாகும். இவை கிமு 200 முதல் கிபி 650 வரையான பல்வேறுபட்ட காலப்பகுதியில் வரைந்தவை. பௌத்த மதக்கொள்கைகளை முதன்மைப்படுத்தி இந்த ஓவியங்கள் வரைந்தவையாகும்.

அஜந்தா ஓவியங்கள்


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின்அஜந்தா எனும் ஊரில் உள்ள குகைகளில்இயற்கை முறையில் வரைந்த ஓவியங்களேஅஜந்தா ஓவியங்களாகும். இவை கிமு 200 முதல் கிபி 650 வரையான பல்வேறுபட்ட காலப்பகுதியில் வரைந்தவை. பௌத்த மதக்கொள்கைகளை முதன்மைப்படுத்தி இந்த ஓவியங்கள் வரைந்தவையாகும்.










ஓர் அஜந்தா ஓவியம

குகை ஓவியம்


1837 ஆம் ஆண்டில், சர். ஜார்ஜ் கிரே (Sir. George Grey) என்பவர், ஆஸ்திரேலியாவில் உள்ளசிட்னிக்கு அருகே பாறை ஓவியத்தைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகப் படுத்தினார். ஆனாலும் ஆய்வாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கவில்லை. பின்னர், 1879 ஆம் ஆண்டில் இன்னுமொரு குகை ஓவியக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. ஸ்பெயின் நாட்டிலுள்ள அல்டமிராஎன்னுமிடத்தில் 12 வயது நிரம்பிய சிறுமிஒருத்தி குகை ஓவியம் ஒன்றைக் கண்டு பிடித்தாள். இக் கண்டுபிடிப்பின் பின்னரேமானிடவியல்தொல்லியல் போன்ற துறைகளைச் சேர்ந்த ஆய்வாளர்களிடையே குகை ஓவியங்கள் பற்றிய ஆர்வம் எழுந்தது.

Paintings on Lol-Tun cave from Yucatán
முதன் முதலாக ஐரோப்பாவில் அல்டமிராவில்மக்தலேனியப் பண்பாட்டைச் சேர்ந்த குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டபோது, அது ஒரு ஏமாற்று என்று கல்வியாளர்களால் கருதப்பட்டது. எனினும், பிற்காலத்து மீள் மதிப்பீடுகளும், தொடர்ந்து இடம்பெற்ற புதிய குகை ஓவியக் கண்டு பிடிப்புக்களும், அதன் நம்பகத் தன்மையை உறுதி செய்துள்ளன. அத்துடன், மிக எளிமையான கருவிகளைப் பயன்படுத்திய மேற் பழையகற்கால மனிதர்களின் உயர் தரத்திலான கலைத் திறமையையும் அவை வெளிக் கொணர்ந்துள்ளன.
குகை ஓவியங்கள் அவை வரையப்பட்ட கால கட்டங்களின் பண்பாடு, நம்பிக்கைகள் முதலியவற்றை அறிந்து கொள்வதற்கான பெறுமதியான தகவல்களையும் நமக்குத் தருகின்றன.
ஆஸ்திரேலியக் குகை ஓவியங்கள் சிலவற்றைக் கீழே காண்க.