//]]>3

வியாழன், 10 மே, 2012

கைகளில் வரையப்பட்ட அற்புத சிற்ப ஓவியங்கள் (Photos)


Body Painting முறையில், அற்புதமான கைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் இவை.

ரஜினி – தீபிகா இடையில் உறவு வலுப்பெறுகிறது?



கோச்சடையான் திரைப்படம் ரஜினியின் மகள் சௌந்தர்யாவால் இயக்கப்படுகிறது. இதில் சூப்பர் ஸ்டாருடன் தீபிகா படுகோன் கதாநாயகியாக இணைந்துள்ளார்.
படப்பிடிப்பு தளங்களில், தீபிகா படுகோன், சூப்பர் ஸ்டாரை ”அப்பா” என்றே அழைத்து வருகிறாராம்.
இந் நிலையில் சென்னையில் தற்போது நடைபெற்று வரும் கோச்சடையானின் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பில் ரஜினியும் தீபிகாவும் மிக நெருக்கமாக காதல் செய்வது போல நடன அசைவுகள் வைத்திருந்தாராம் நடன இயக்குனர் சரோஜ்கான்.
அந்த நெருக்கமான காட்சியில் நடிக்க மறுத்துள்ள சூப்பர்ஸ்டார், தனது மகள் போன்ற தீபிகாவுடன் இவ்வாறான நெருக்கமான காட்சிகளில் நடிப்பது தனக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

பெரிய மொய் கொடுத்து ஸ்நேகாவுக்கு டும்… டும்…!விஜய் ரிவி



நடிகை ஸ்நேகா – பிரசன்னா ஜோடி திருமண பந்தத்தில் இணைய இன்னும் 24 மணிநேரத்துக்கும் குறைவான மணித்துளிகளே மீதமிருக்கின்றன.
இவ் நட்சத்திர ஜோடி திருமணம் நாளை, சென்னை வாணாகரம் வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது.
பெரும் என்ணிக்கையில் திரையுலக நடிகர் நடிகைகள் சமூகமளிப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கும் திருமண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இவர்களது திருமண நிகழ்ச்சியை நேரடியக ஒளிபரப்பும் உரிமையை விஜய் தொலைக்காட்சி பெரும் தொகை பணம் கொடுத்து வாங்கியுள்ளது.
திருமணம் நடப்பதற்கு முன்னர் பெரிய அளவில் மொய்ப்பணம் இவ் நட்சத்திர ஜோடிக்கு கிடைத்துள்ளது…!

நடிகைகள் இருவருக்கும் இந்த சண்டை தேவை தானா?



பெரிதாக தமிழ் சினிமா உலகில் எடுபட முடியாமல் திண்டாடுபவர்கள் நடிகை ஓவியாவும், ”யுத்தம் செய்” நடிகை தீபா ஷா வும். இவர்களின் மார்க்கெட் நிலைமை இப்படி இருக்க, நட்சத்திர நடிகைகள் போல் இருவரும் சண்டை போட்டு கொண்டுள்ளனர்.
”சில்லுனு ஒரு சந்திப்பு” படப்பிடிப்பில் ஓவியாவும், தீபா ஷா வும் நடித்து வருகிறார்கள்.
இதன் படப்பிடிப்பு திங்கட்கிழமை மாதவரத்தில் நடந்தது. அப்போது தீபா ஷாவுக்கும், ஓவியாவுக்கும் பிரச்னை ஏற்பட்டதால் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து தீபா ஷா வெளியேறியதாக செய்தி வெளியானது.
நடந்தது குறித்து தீபா ஷா கூறியதாவது…
இந்தப் படத்தில் எனது காட்சிகள் கடந்த சில நாட்களாக படமாக்கப்பட்டு வந்தது. எனக்காக கேரவன் கொடுத்திருந்தனர்.
திடீரென்று அங்கு ஓவியா வந்தார். அரை மணி நேரம் மட்டும் ஓவியா உங்கள் கேரவனில் தங்குவார், அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று பட யூனிட்டை சேர்ந்தவர்கள் கூறினர்.
நானும் பரவாயில்லை என்று இருந்தேன். மலேசிய சேனல் ஒன்றுக்காக அவர் வீடியோ பேட்டி கொடுக்க இருப்பதாகக் கூறினார். நான் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தேன். கேரவனுக்குள்ளேயே கேமராவை கொண்டு வந்தனர். இது பிரச்னையாக இருக்கும் என்று சொன்னேன். ஐந்து நிமிடம் தான் என்றார்.
பிறகு இருபது நிமிடம் வரை போய்க்கொண்டிருந்தது. எனக்கு அடுத்த ஷாட் இருப்பதால் மேக்கப் போடுவதற்கு இடைஞ்சலாக இருந்ததை சொன்னேன். வெளியே போகச் சொன்னார்கள். இது எனக்காக கொடுக்கப்பட்ட கேரவன். நான் ஏன் வெளியே போகவேண்டும் என்றேன்.
பேசிக்கொண்டிருக்கும் போதே ஓவியாவின் மானேஜர் அருண், என்னை அடிக்கப் பாய்ந்தார். எனது மேக்கப் மேன் ஓடிப்போய் அவரை தடுத்தார். எனக்கு ஷாக் ஆகிவிட்டது.
இப்படியொரு மோசமான சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து நான் வெளியேறிவிட்டேன். பிறகு பட யூனிட், ஓவியாவையும் அருணையும் மன்னிப்புக் கேட்க வைத்தபிறகு நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். இதுதான் நடந்தது.
நான் யுத்தம் செய் படத்தில் நடித்தபோதே எனக்கு மானேஜராக இருக்கிறேன் என்று அருண் கேட்டார். மறுத்துவிட்டேன். அந்த கோபத்தில் இந்த சம்பவத்தை பயன்படுத்தி மீடியாவுக்கு என்னை பற்றி தவறான செய்தியை அளித்துள்ளார். இதுபற்றி நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்க இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
ஓவியாவின் மானேஜர் அருணிடம் கேட்ட போது…
கேரவனில் ஓவியா பேட்டி அளித்த போது, தீபா ஷா செல்போனில் சத்தமாகப் பேசினார். உடனே ஓவியா, பத்து நிமிஷம் அமைதியாக இருங்கள் என்றார்.
என்றாலும், அவர் பேசிக்கொண்டே இருந்ததால், இடைஞ்சலாக இருந்தது. நான் தீபா ஷாவிடம், அமைதியாக இருக்கும்படி சொன்னேன். அப்போது தீபா ஷாதான் என்னையும், ஓவியாவையும் தகாத வார்த்தையால் பேசினார். இது அங்கிருந்தவர்களுக்குத் தெரியும் என்றார்.

யாழ் கந்தர்மடம்அருள் மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத் தேர்த் திருவிழா 2012(வீடியோ)

யாழ். கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்துள்ள அருள் மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத் தேர்த் திருவிழா (08.05.2012) காட்சிகளும் தண்டகைக்காட்சியும் 

பல நோய்களுக்கு பயன்படும் மங்குஸ்தான் தற்போது அருகிவருகிறது



பழங்கள் உடலுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கும்
தன்மை கொண்டவை. பழங்களில் உள்ள உயிர்
சத்துக்களான வைட்டமின்கள், தாதுப் பொருட்கள்
 உடலுக்கு வலுவூட்டுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்துகள்
 குடலுக்கு நல்லது.

பழங்காலத்தில் மனிதர்கள் பழங்களையே உணவாக உண்டு
 வந்தனர். அதனால் நோய்களின் தாக்கம் இல்லாமல்
ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.இவை மலைப் பகுதிகளில்
 விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற
 தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி
 தடிமனாக இருக்கும்.

இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று
அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள்
 இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். மலேசியா,
 மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில்
 அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில்
 தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர்.
இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு

சீதபேதி

இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான்
பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக
அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்
சீதபேதி உடனே குணமாகும்.உடல் சூட்டைத் 
தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு
 உண்டு.
கண் எரிச்சலைப் போக்க

கம்பியூட்டரில் வேலை செய்யும் இளைய தலை
முறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி
 அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால்
 சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள்
. இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால்
கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

வாய் துர்நாற்றம் நீங்க

வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும்.
 இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும்
 உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில்
தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும்
கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.


மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு,
 அல்லது அதன் தோலை காயவைத்து பொடி
செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்
துர்நாற்றம் நீங்கும்.

மூலநோயை குணப்படுத்த

நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல்
அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு
 சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை
 பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண்
ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக
 எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது
 நல்லது. அதோடு மங்குஸ்தான் பழத்தை
 சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட
பாதிப்புகள் குறையும்.

பெண்களுக்கு

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும்
 அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான்
 பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில்
 மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது
 நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின்
தோலை காய வைத்து பொடிசெய்து பாலில்
 கலந்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும்.

சிறுநீரைப் பெருக்க

சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில்
தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும்.
சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம்
சிறந்த மருந்தாகும்.

* இருமலை தடுக்கும்
* சூதக வலியை குணமாக்கும்
* தலைவலியை போக்கும்
* நாவறட்சியை தணிக்கும்.

மங்குஸ்தான் பழத்தில்

நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம்
கொழுப்பு - 0.1 கிராம்
புரதம் - 0.4 கிராம்
மாவுப் பொருள் - 14.8 கிராம்
பாஸ்பரஸ் - 15 மி.கி.
இரும்புச் சத்து - 0.2 மி.கி

உடலுக்குத்தேவையான அனைத்து
 ஊட்டச்சத்துக்களையும் கொண்ட இப்பழத்தை
 உண்டு பயனடைவோம்.

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பொருட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்


வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பொருட்கள் சிலவற்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சுங்கத் திணைக்கள விசேட தேடுதல் பிரிவு நடத்திய சோதனை நடவடிக்கையில் இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சனத் பெனாண்டோ தெரிவித்தார். தாய்லாந்து, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து குறித்த பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனுள் சிகரெட், பீடி, புகையிலை, கஜு உள்ளிட்ட பல பொருட்கள் அடங்குவதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பள்ளிக்கூட மாணவிகளோடு செக்ஸ் லீலை: பாக்கிஸ்தானியர்களுக்கு 77 வருட சிறை !



9 பேர் கொண்ட பாக்கிஸ்தான் முஸ்லீம் குழு ஒன்று லண்டனில் திட்டமிட்ட வகையில் 13 வயது தொடக்கம் 15 வயதுடைய பள்ளிக்கூட மாணவிகளுடன் பாலுறவில் ஈடுபட்டுள்ளனர். இச் செய்தியை அதிர்வு இணையம் கடந்த வருடம் வெளியிட்டிருந்தது யாவரும் அறிந்ததே. லண்டனுக்கு வெளியே உள்ள புறநகர்ப் பகுதி ஒன்றில் பாக்கிஸ்தான் உணவு விடுதி ஒன்றை நடத்திவந்த இந் நபர்கள், அருகில் உள்ள தமது பலசரக்கு கடை நண்பர்களுடன் இணைந்து சிறுமிகளுக்கு மது விற்பனை செய்துள்ளனர். இந் நபர்கள் சுமார் 5 சிறுமிகளை மதுபோதைக்கு அடிமையாக்கி பின்னர் போதைவஸ்துகளையும் கொடுத்து அவர்களுடன் பாலுறவில் ஈடுபட்டுள்ளனர். தாம் அனுபவித்த சிறுமியை தனது நண்பர்களுக்கு கொடுப்பதும், அவர்கள் அதை தனது நண்பர்களுக்கும் கொடுப்பது வழக்கம்.

இவ்வாறு ஒரு சிறுமியை பலர் பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தியுள்ளனர். இவர்கள் வலையில் இதுவரை 5 பள்ளிக்கூடச் சிறுமிகள் வீழ்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் 15 க்கும் மேற்பட்ட சிறுமிகளை தம் வலையில் சிக்கவைத்து அவர்களுக்கு மதுபோதை ஏற்றி இறுதியில் தமது இச்சையை தீர்த்துக்கொண்டுள்ளனர். இவர்களில் ஒரு சிறுமி பொலிசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். நேற்றைய தினம் நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தது. அதற்கு முன்னதாக நீதிபதி குற்றவாளிகளைப் பார்த்து சில விடையங்களைத் தெரிவித்தார்.

நீங்கள் இச் சிறுமிகளை, உங்கள் சமூகத்தவர் இல்லாத காரணத்தால் தான் கற்பழித்துள்ளீர்கள் ! அவர்கள் உங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் இப்படி நீங்கள் செய்திருப்பீர்களா ? என்று கேள்வி எழுப்பினார். இந்த பாக்கிஸ்தான் முஸ்லீம்களில் ஒருவர் உடனே எழுந்து, நீதிபதியை நீ ஒரு இனவாதம் பிடித்தே வேசி எனத் தகாத வார்த்தைகளினால் திட்டினார். இதனால் அவர் நீதிமன்றில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் இவர்கள் அனைவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Yamaha வின் 2012 க்கான Fazer மோட்டார் சைக்கிள்



யப்பானிய கம்பனியான யமகா வின் இந்திய தயாரிப்பான 2012 ஆம் ஆண்டுக்குரிய ஃபேஷர் FZ-S வகை மோட்டார் வண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யமகா வுடன் போட்டிக்கு ஹீரோ, பஜாஜ், டீ.வி.எஸ் போன்ற மோட்டார் நிறுவனங்கள் இருந்த போதும் தனது விசேட தன்மை கொண்ட வடிவமைப்பால் யமகா நிறுவனம் இளைஞர்களை கவர்ந்து வருகிறது.
முந்தைய மாடல்களில் இல்லாத, சௌகர்யமான பின்புற இருக்கை, அகலமான பின் சில்லு டயர், அழகிய கிரபிக்ஸ் வேலைப்பாடுகள் போன்றவற்றை 2012 மாடல் கொண்டுள்ளது.
White, Black Cyber Green, Lava Red, Midnight Black ஆகிய வர்ணங்களில் இம் மாடல்கள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.
டெல்லி காட்சியறையில் இவ் 2012 ஃபேஷர் FZ-S மோட்டர் சைக்கிளின் விலை 76380 இந்திய ரூபாய்கள் என விலையிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 8 மே, 2012

BBC ஊடகவியல் கல்லூரி



பிபிசி ஊடகவியல் கல்லூரியும் மற்றும் பிபிசி உலகசேவையும், ஏழு ஆசிய மொழிகளில் சிறப்பு மொழி வழிகாட்டிகளைக் கொண்டுவருவதில் பெருமையடைகின்றன. தமிழ், சிங்களம், ஹிந்தி, வங்காளி, பர்மிய, நேபாளி மற்றும் வியட்நாமிய மொழிகளில் இந்த வழிகாட்டிகள் தொடங்கப்படுகின்றன. 

இந்தப் புதிய வெளியீடுகள் ஏற்கனவே அரபிய, பிரெஞ்சு, சீன, பஷ்டூ, ருஷ்ய, உருது போன்ற 19 மொழிகளில் பிபிசி உருவாக்கிய வழிகாட்டிகள் பட்டியலில் இணைகின்றன. 

இந்த வழிகாட்டி பிபிசி செய்தியாளர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி சேர்த்த திறன் மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. இந்த அறிவை, உலகெங்கும் உள்ள செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொள்வதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். 

இந்த வழிகாட்டிகள் ஊடகவியல் என்பது எப்படி ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் மொழியைப் பற்றியதுதான் என்பதைக் கோடிட்டுக்காட்டுகின்றன. 

ஊடகவியலின் விழுமியங்களைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்றால், இந்த விழுமியங்களை வெளிப்படுத்துவதில் மொழி வகிக்கும் பங்கை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். 

இது ஒரு முதல் படிதான். 

இந்தப் பக்கங்கள் வளர்ந்து ஊடகவியலுக்கும் மொழிக்குமான ஒரு முழுமையான வழிகாட்டிகளாக உருவெடுக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்  (BBC கல்விச்சேவை) 

கதிர்காமத்திற்கான யாத்திரைகள் வடக்கு கிழக்கிலிருந்து ஏற்பாடு




வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவையொட்டிய பாத யாத்திரை வழமை போல் இம்முறையும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இம்முறை யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் மே 18 இல் ஆரம்பிக்கும் பாதயாத்திரை ஜுலை 18 இல் கதிர்காமம் கொடியேற்றம் நடைபெறும் தினத்தன்று சென்றடைய விருக்கிறது.

காரைதீவைச் சேர்ந்த வேல்சாமி தலைமையில் இருமாத காலம் இடம்பெறும் இப் பாத யாத்திரை கடந்த பல வருடங்களாக வெருகல் முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.



முச்சக்கரவண்டியொன்றி 3 பேர் மாத்திரம் பயணிக்க அனுமதி



முச்சக்கரவண்டியொன்றின் பின் ஆசனத்தில் 3 பயணிகள் மாத்திரமே பயணிப்பதற்கு அனுமதிக்கும் சட்டத்தை இன்று முதல் பொலிஸ் திணைக்களம் கடுமையாக அமுல்படுத்தவுள்ளது.


வீதி விபத்துக்களை குறைப்பதற்கு இந்த நடவடிக்கை உதவியளிக்குமென பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து மே மாதம் 7ஆம் திகதிவரையான காலத்தில் 27 முச்சக்கரவண்டி விபத்துக்கள் இடம்பெற்றதாகவும் இவ்விபத்துக்களில் 34 பேர் பலியானதாகவும் அவர் கூறினார்.

முச்சக்கரவண்டி விபத்து ஏற்பட்டால் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சேவையில் ஈடுபடும் 67 000 முச்சக்கரவண்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

திங்கள், 7 மே, 2012

அறிவியல் நகர் பல்கலைக்கழக வளாகத்திற்கு அமைச்சர்கள் விஜயம்



கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மற்றும் விவசாய பீடம் வளாகத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க அவர்களும் இன்று பார்வையிட்டனர். 


மேற்படி வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடங்கள் மற்றும் காணியை பார்வையிட்டதுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டிட புனரமைப்புப் பணிகள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர். 



500 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இவ்வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் தொடர்பிலும் இன்றைய தினம் ஆராயப்பட்டது. 



இதில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் இலங்கைக்கான இந்திய பிரதி உயஸ்தானிகர் திரு.மகாலிங்கம் யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 



மேற்படி புனரமைப்புப் பணிகள் வெகுவிரைவில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி



பவுஸர் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர். அ{ஹங்கல்ல பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


உரம் ஏற்றிச் சென்ற லொறியொன்று பவுஸரை முந்திச் செல்ல முற்பட்டபோது அவ்விரு வாகனங்களுக்கிடையில் மோட்டார் சைக்கிள் சிக்கியது. மோட்டார் சைக்கிளின் பின்னால் லொறி மோதியது. அதன்பின் பவுஸரின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பிரான்ஸின் புதிய ஜனாதி



பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் சோசலிச கட்சி வேட்பாளர் பிரன்சுவா ஒலண்ட் வெற்றிபெற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 52 வீத வாக்குகளைப் ஒலண்ட் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ள மத்திய வலதுசாரி கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி நிக்கோலாஷா சாகோரி ஒலண்டிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் கடன் நெருக்கடி தொடர்பாக அரசாங்கங்களுடன் மறுபடியும் பணியாற்றுவது தொடர்பான உடன்படிக்கையை ஏற்படுத்துவதாக ஒலண்ட் உறுதியளித்துள்ளார்.

நெற்பயிரில் வேதியியல் சாரா பூச்சிக்கட்டுப்பாடு முறைகள்



விளக்குப்பொறி: பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்திழுக்கவும் விளக்குப் பொறிகளைப் பயன்புடுத்தலாம். தேவையில்லாத பொருட்களை வயலில் ஒரு ஓரமாகக் குவித்து மாலை வேளைகளில் தீ மூட்டி விளக்குப் பொறியாகப் பயன்படுத்தலாம். மேலும் அரிக்கேன் விளக்கு மற்றும் மின்சார விளக்குகளையும் பொறியாகப் பயன்படுத்தலாம். இந்தப் பொறிகளை மாலை ஐந்தரை மணிக்கு மேல் வயலில் வைக்க வேண்டும். தாய் அந்துப் பூச்சிகள் விளக்கின் வெளிச்சத்தினால் கவரப்படும். இந்த முறையில் தாய்ப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். விளக்குப் பொறிகளின் அருகில் ஒரு பெரிய தட்டு அல்லது பாத்திரத்தில் கொஞ்சம் மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் வைக்க வேண்டும்.

* மஞ்சள் ஒட்டுப்பொறி: மஞ்சள் இரும்புத்தகடு அல்லது மஞ்சள் டப்பாக்களில் ஆமணக்கு எண்ணெயை தடவி வயலில் வைக்க வேண்டும். இந்த நிறத்தினால் கவரப்படும் வெள்ளை ஈக்கள் மற்றும் தத்துப்பூச்சிகள் அந்தப் பொறிகளில் ஒட்டிக் கொள்ளும். ஒவ்வொரு நாளும் ஒட்டிக்கொள்ளும் பூச்சிகளை துடைத்து எடுத்துவிட்டு மீண்டும் எண்ணெய் தடவவேண்டும்.

* பறவை தாங்கி (பறவை ஆசனம்): நீளமான காய்ந்த குச்சிகளைக் கொண்டு "டி' வடிவ பறவை தாங்கிகளை (ஒரு ஏக்கருக்கு 15-20) வயலில் வைக்க வேண்டும். இவற்றில் பறவைகள், ஆந்தைகள் வந்து உட்கார வசதியாக இருக்கும். இவற்றில் உட்காரும் பறவைகள் வயலில் காணப்படும் புழுக்கள் மற்றும் எலிகளை உண்டு அவற்றைக் கட்டுப்படுத்தும்.

* கையால் சேகரித்து அழித்தல்: சாகுபடி பரப்பரளவு குறைவாக இருக்கும்பொழுது இந்த முறையைப் பயன்படுத்தலாம். பாலிதீன் பைகளில் தண்ணீருடன் சிறிதளவு மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும். மாலை நேரங்களில் வயல்களில் காணப்படும் புழுக்கள் மற்றும் முட்டைக்குவியல்களைச் சேகரித்து மண்ணெண்ணெய் சேர்க்கப்பட்ட இந்தப் பைகளில் போட்டு அழிக்கலாம். பூச்சித் தாக்குதல் குறைவாக இருக்கும்பொழுதே இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும் 

ஆபாசப் படங்களில் பூஜா! அம்பலப்படுத்தியது கன்னடப் பத்திரிக்கை!



ஆபாசப் படங்களில் பூஜா நடித்துள்ளார் என்று கன்னட பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது. இந்த செய்தியைப்பார்த்த நாயகி பூஜா கடும் கோபத்திற்கு ஆளானார்.

இதையடுத்து தன் மீது அபாண்டமாக வீண் பழி சுமத்தியுள்ளதாக அப்பத்திரிக்கை மீது பூஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.இதுகுறித்து பூஜா, தமிழில் கடைசியாக நான் கடவுள் படத்தில் நடித்துவிட்டு இலங்கை சென்று விட்டேன்.நான் இல்லாத சமயம், கன்னட பத்திரிக்கை ஒன்று என் மீது அபாண்டமாக வீண் பழி சுமத்தியுள்ளது. அப்பத்திரிக்கை மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளேன். 

என் மீது பழி சுமத்தியவர்களை வெறுமனே விடமாட்டேன். பழிக்கு பழி வாங்குவேன் என்று ஊடக நிருபர்களிடம் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.தற்போது பாலாவின் “பரதேசி” என்ற புதியதொரு படத்தில் பூஜா நடித்து வருகிறார். 

ஞாயிறு, 6 மே, 2012

பெரிய உருவமாக வானத்தில் சந்திரன் இன்று காணலாம்





சூரியனை மையமாக கொண்ட பால்வெளி மண்டல கோள்கள் அனைத்தும் தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வருகின்றன. 

இவற்றில் பூமியையும் சேர்த்து சுற்றும் ஒரே கோள் சந்திரன் மட்டுமே ஆகும். 

பூமியிலிருந்து நிலவின் வழக்கமான சுற்றுவட்டப் பாதை தூரம் 4,06,349 கி.மீ. ஆகும். 

இன்று மே 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்திரனின் சுற்று வட்டப் பாதை பூமிக்கு மிக அருகில் அமைந்து இருகோள்களுக்கும் இடையே உள்ள தூரம் 3,56,955 கி.மீ. ஆகக் குறைகிறது. 

எனவே இன்று இரவு 9 மணியிலிருந்து வழக்கத்தை விட நிலாவின் உருவம் 11 சதவீதம் பெரியதாக தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் வீதி பொதுப் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது



இறுதிப் போர் நடந்த பகுதிகளில் ஒன்றான வெள்ளாம் முள்ளி வாய்க்கால் ஊடான பாதை முதல் தடவையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டிருக்கிறது. 

புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவுக்குச் செல்லும் இந்த வீதி வெள்ளாம் முள்ளிவாய்க்கால் ஊடாகச் செல்கிறது. 

இந்த வீதியினூடாக பொதுமக்கள் போக்குவரத்து பேருந்துகள் அனுமதிக்கப்படுகின்ற போதிலும், அந்தப் பகுதிக்குள் இறங்கிச் செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. 

உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படுகின்ற இந்தப் பகுதியில் வீதியினூடாகச் செல்வதற்கும் பொதுமக்களுக்கு முன்னர் அனுமதி கிடையாது. ஆனால், இந்திய பாராளுமன்றக் குழுவின் விஜயத்தின் பின்னர், அது தற்போது பொதுமக்கள் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. 

மூன்று வருடங்களுக்கு முன்னதாக இறுதிப் போர் நடந்த புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் உட்பட ஏனைய பகுதிகளுக்கு தற்போது பொதுமக்கள் சென்று, அங்கு கைவிடப்பட்டுக் கிடக்கும் தமது வாகனங்களை பார்த்துவர அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள். 

இந்த வீதியில் பொக்கணை, மந்துவில், கரையாம் முள்ளிவாய்க்கால், வெள்ளாம் முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய பகுதிகளினூடாகச் சென்று வந்த எமது பீபீசி செய்தியாளர், பொன்னையா மாணிக்கவாசகம், போர் முடிந்து மூன்று வருடங்களின் பின்னரும் அந்தக் கிராமங்கள் ஒரு மயானம் போன்றே காணப்பட்டதாகக் கூறுகிறார். 

கைவிடப்பட்டு சிதைந்துபோன வாகனங்களும், இடம்பெயர்ந்த மக்களின் பாத்திர பண்டங்களும் அங்கு இறைந்து கிடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

குண்டுகளால் துளையிடப்பட்ட சில கட்டிடங்களும் ஆங்காங்கு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (பீபீசி தமிழோசை) 

கண்டி மற்றும் மஹியங்கனை இடையிலான 18 வளைவுவீதி திறக்கப்பட்டுள்ளது



கண்டி மற்றும் மஹியங்கனை ஆகிய நகரங்களை இணைக்கும் 18 வளைவுகள் கொண்ட வீதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

500 கோடி ரூபாய் செலவில் மூன்று வருடங்களாக நிர்மாணிக்கப்பட்டு வந்த இவ்வீதி, திறக்கப்படுவதால் மஹியங்கனையிலிருந்து கண்டிக்கு செல்லும் நேரம் இரண்டு மணித்தியாலங்களினால் குறையும் என வீதி அபிவிருத்தி சபை தெரிவிக்கின்றது.
 

சனி, 5 மே, 2012

24h news 5.5.2012 .இரவுச்செய்திகள்(வீடியோ)

ஜனாதிபதியின் சம்மா சம்புத்த வாழ்த்து செய்தி!


ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்து செய்தி…!
புத்த பெருமானின் வாழ்வில் மிக முக்கிய மூன்று நிகழ்வுகளைக் குறித்து நிற்கும் வெசாக் பெருவிழாவை பூரண அரச அனுசரணையுடன் கொண்டாடக் கிடைத்தமையை நான் பெரும் பாக்கியமாக கருதுகின்றேன்.
கடந்த வெசாக் பண்டிகையின் போது உதயமான ஸ்ரீசம்புத்தத்வ ஜயந்தி வருடத்தில் இலங்கைவாழ் பெளத்த மக்கள் பெளத்த கொள்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்ததைக் கண்டு நாம் பெரிதும் மகிழ்ச்சியடைந்தோம்.
புத்தபெருமானின் மீதான ஆழ்ந்த தியானத்தின் அபரிமிதமான மகிழ்ச்சியுடன் இந்த வெசாக் தினத்தில் சம்புத்தத்வ ஜயந்தி கொண்டாட்டங்கள் நிறைவுபெறுகின்றன என்ற வகையில் இந்த வருடத்தில் இலங்கையெங்கும் பரவிச் சென்ற பாரிய சமய எழுச்சி- ஞானம்- அர்ப்பணம் என்பவற்றை நாம் நினைவுகூருகிறோம்.
புத்த பெருமானின் மீதும் அவரது போதனைக ளின் மீதும் உள்ள இந்த மகிழ்ச்சி எல்லா இலங்கையர்களினதும் உள்ளங்களிலும் நீடித்து நிலைத்துநிற்க வேண்டுமென்பதே எமது விருப்பமாகும்.
குழப்பமில்லாத ஒரு வாழ்க்கையை முன்னெடுக்க புத்தரின் போதனைகள் சிறந்த வழியாகும்.
இந்தப் போதனைகள் தீமைகள் இல்லாத வாழ்வுக்கும் ஈருலக வெற்றிக் கும் வழிகாட்டுகின்றன.
பிழையான எண்ணங்கள்- சிந்தனைகளைக் கொண்டவர்கள் எமது முன்னேற்றத்தின் வாயில்களை மூடிவிடும் பல்வேறு பிரிவினைகளையும் மோதல்களையும் தோற்றுவிக்கின்றனர் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
அத்தனாவ கதங் பாபங் – அத்தனா ஸங்கிலிஸ்ஸதி
அத்தனா அகதங் பாபங் – அத்தனாவ விஸ¤ஜ்ஜிதி
ஸ¤த்தி அஸ¤த்தி பச்சத்தங் – நாஞ்ஞோ அஞ்ஞங் விஸோதயே
உன்னாலேயே பாவம் செய்யப்படுகிறது. உன்னையே அது அசுத்தப்படுத்துகிறது. பாவம் செய்யாமலிருப்பவர் தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்கிறார். பாவமும் புண்ணியம் உன்னாலேயே செய்யப்படுகின்றன.
ஒருவர் இன்னொருவரைச் சுத்தம் செய்ய முடியாது என தம்மபதம் குறிப்பிடுகின்றது.
எனவே இந்த வெசாக் பண்டிகைக் காலத்தில் எல்லாவகையான பிரிவினைகளையும் ஒதுக்கிவிட்டு தேசிய ஐக்கிய சமய நல்லிணக்கத்திற்காக அர்ப்பணத்துடன் செயற்பட்டு பெளத்த போதனைகளின் ஒளியில் ஈருலக வெற்றிக்கு வழிசெய்வோம்.
உங்கள் எல்லோருக்கும் சம்மா சம்புத்த நல்லாசிகள்!

தொலைக்காட்சி நிகள்வு்களின் ஏற்பாடுகள் எப்படி நடக்கிறது பாருங்கள் (வீடியோ)

தொலைக்காட்சி நிகழ்சிக்கு முன் நடைபெறும் சில நிகழ்வுகள் உங்களுக்கு கவனமாக செயற்படுங்கள்

வெள்ளி, 4 மே, 2012

தற்போது பெண்களை ஆண்கள் விரும்புவதா ஆண்களை பெண்களை விரும்புவதா அதிகம்


திருமணத் தகவல் தொடர்பு இணையதளம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், அழகான பெண்ணே மனைவியாக வரவேண்டும் என ஆண்களும்; நல்ல வேலையில் உள்ள ஆண் தான் கணவனாக வரவேண்டும் என பெண்களும் விரும்புகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.



டில்லியைச் சேர்ந்த திருமணத் தகவல் தொடர்பு இணையதளம் ஒன்று, தன் இணையதளத்தில் திருமணத்துக்காகப் பதிவு செய்திருந்த ஆண், பெண் உட்பட ஐயாயிரம் பேரிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. தன் வருங்கால கணவன் அல்லது மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.அந்த ஆய்வில், பெண் குடும்பத்தாரின் பின்னணிக்கு, 49 சதவீத ஆண்கள் முன்னுரிமை அளித்துள்ளனர். பெண்ணின் அழகான தோற்றத்துக்கு, 48 சதவீதம் பேர் முக்கியத்துவம் அளித்துள்ளனர். 39 சதவீதம் பேர், தனக்கு வரும் மனைவியின் கல்வி குறித்து கவலை தெரிவித்துள்ளனர். 47 சதவீதம் பேர், வருங்கால மனைவியின் வேலைவாய்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். 45 சதவீதம் பேர், பெண்ணின் ஜாதி மற்றும் இனம் குறித்து அக்கறை தெரிவித்துள்ளனர். மாறாக, 54 சதவீதம் பெண்கள், தங்களுக்கு கணவனாக அமையப் போகிறவரின் வேலை குறித்து அக்கறை தெரிவித்துள்ளனர்.
53 சதவீதம் பேர், கல்வி குறித்தும், 52 சதவீதம் பேர், கணவரின் குடும்பப் பின்னணி குறித்தும் கருத்து தெரிவித்துள்ளனர். 46 சதவீதம் பேர், ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 65 சதவீதம் பெண்கள், ஆண்களின் தோற்றத்தை முக்கியமானதாகக் கருதவில்லை.இதுகுறித்து அந்த இணையதளத்தின் தலைவர் கூறுகையில், “பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் போக்கு இக்காலத்தில் மாறிவருகிறது. அப்படிப்பட்ட நிலையில் கூட, ஜாதி மற்றும் குடும்பப் பின்னணி முக்கிய காரணிகளாகவே கருதப்படுகின்றன. இதற்கு, மணமகன் தன் பெற்றோரின் கருத்துக்கு இணங்கிச் செல்வதே முக்கிய காரணம். பெண்கள் தங்களின் பாதுகாப்பான வாழ்க்கை குறித்து கவலைப்படுவதால், கணவனின் கல்வி மற்றும் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்’ என்று தெரிவித்தார்.இருப்பினும், அழகான பெண்ணே தனக்கு மனைவியாக வரவேண்டும் என்ற ஆண்களின் எதிர்பார்ப்பே ஒருவகையில் சட்டவிரோதமான கள்ளத் தொடர்புகளுக்கும் வழிவகுத்து விடுகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இராணுவ சிப்பாய்கள் இருவர் பலி



யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியோரமாக ஈபிடிபி அலுவலகத்திற்கு முன்னாள் உள்ள இராணுவ பாதுகாப்புச் சோதனைச் சாவடியொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு இராணுவ சிப்பாய்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.

இந்த இரு இராணுவ சிப்பாய்களும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு சிப்பாய்   மற்றுமொரு இராணுவ சிப்பாய் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார்.
இந்த இரு இராணுவ சிப்பாய்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட காரணத்தின் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
தனது சக சிப்பாய் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட இராணுவ சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இச் சம்வப இடத்திற்கு சென்ற யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசாராச மற்றும் சட்ட வைத்திய அதிகாரி நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


யாழில் கயிறு தயாரிக்கும் தொழிலாளி

வியாழன், 3 மே, 2012

24h news யாழில் நடைபெற்ற பெரகரா டான்ஸ்

24h news சிங்கள டான்ஸ் 3

எந்த விடியோவையும் மெயிலில் அனுப் ஏதுவான புதிய மென்பொருள்



வீடியோவை பகிர்வது என்றாலே தலைவழியாக உள்ளது. பெரிய அளவு விடியோவை மெயில் செய்ய முடியாது அதற்கு திர்வு தான் Vigleo மென்பொருள் வீடியோ ஒரு வேகமான வழியில் ஒரு சுலபமாக பகிர செய்யலாம். உங்கள் கணினியில் இருந்து எந்த வடிவத்தில் எந்த வீடியோ எடுத்து Vigleo அதை சேர்க்க வேண்டும். பின்பு இதை நீங்கள் மின்னஞ்சல் மூலம், அல்லது உங்கள் சொந்த வலை தளத்தில் அதை சேர்க்க ஒரு குறியீட்டை உட்பொதி கிடைக்கும்


 Vigleo உங்கள் Web Cam வீடியோ பதிவு அல்லது ஒரு வீடியோ பயிற்சி செய்ய உங்கள் திரையில் ஒரு திரை பிடிப்பு செய்ய வாய்ப்பு கொடுக்கிறது.இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7download

பேஸ்புக்கில் நண்பர்களுடன் பாடல் கேட்கும் வசதி




நண்பர்களுடன் பேசி(chat)க்கொண்டிருக்கும் போதே, விரும்பிய பாடல்களையும் கேட்டுக்கொள்ளும் வசதியை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒருவருடன் என்று மட்டுமல்லாது பல நண்பர்களுடனும் பாடல்களைக்கேட்டுக்கொண்டே சட் பண்ண முடியும்.
அனைவருக்கும் ஒரே நேரத்தில் பாடல் ஒலிப்பதனால், விருப்பத்திற்குரிய குறிப்பிட்ட “பாடல் வரிகளை”ப்பற்றிய கருத்துக்களை கூட ஒரே நேரத்தில் கலந்துரையாட முடியும்
.ஏற்கனவே உள்ள சட்டிங் லிஸ்ட்டுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இச்சேவையானது பாவனைக்கு மிக இலகுவாகவும், தனிமையைப்போக்கி அனைவரும் பக்கத்தில் இருப்பது போன்ற உணர்வைக்கொடுக்கும் என ஃபேஸ்புக் நிறுவந்தார் தெரிவித்துள்ளனர்
.இது எப்படி தோற்றமளிக்க உள்ளது என்பதை பின்வரும் படங்களில் பாருங்கள்.
 ஃபேஸ்புக்கின் இவ் வசதி கூகுள்+ இற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
இச்சேவையப்பெற நீங்கள் “Music App” அப்லிகேஷன்களை நிறுவ வேண்டும்.
தமிழ் குளோனின் பரிந்துரை அப்லிகேஷன்களை “இங்கு” நீங்கள் காணலாம்.


யாழ் ஊடக சுதந்திரதின ஒளிப்படக்கண்காட்சி (வீடியோ-video)

ஊடக சுதந்திரதினத்தினை முன்னிட்டு சுதந்திர ஊடகக்குரல் நடாத்தும் ஒளிப்படக்கண்காட்சி யாழ் நாவலர் வீதியில் உள்ள தியாகிகள் அறக்கட்டளை நிலையத்தில் நேற்று (02.05.2012) புதன் கிழமை காலை 9.10 முதல் ஆரம்பமாகி மாலை வரை நடைபெற்றது 


இங்கு காட்சிப்படுத்தப்பட்ட காட்சிப்படங்களின் வீடியோ